Latest News

July 15, 2013

சினிமாவுக்காக விவசாயம் செய்த பட குழு
by admin - 0

சாரதி, ஹன்சிபா என்ற நியூபேஸ்கள் நடிக்கும் படம் பரஞ்சோதி. கோபு பாலாஜி என்பவர் இயக்குகிறார். பரஞ்சோதி என்ற இளைஞரின் நிஜ கதையாம். படத்துக்காக 1990ம் ஆண்டு இருந்த மாதிரி ஒரு கிராமத்தை தேடியிருக்கிறார்கள். கிடைக்கவில்லை. எனவே ஆர்ட் டைரக்டர் வினோத் மூலம் 100 ஏக்கர் நிலத்தில் ஒரு கிராமத்தையே அப்படியே ஷெட் போட்டுள்ளனர். கதைப்படி ஊரைச் சுற்றி தினையும், சோழமும் பயிரிட்டிருக்க வேண்டுமாம். இந்த விவசாயம் இப்போது அரிதாக இருப்பதால். இவர்களே கிராமத்து ஷெட்டை சுற்றி  மூன்று மாதத்துக்கு முன்பே விவசாயம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இப்போது ஷெட்டை சுற்றி பசுமையாக இருக்க படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. படம் முழுக்க ஒரு நாய் நடிக்கிறதாம். இதற்காக ஒரே மாதிரியான நான்கு நாய்களை பிடித்து வந்து கதையின் காலத்துக்கு தக்கபடி நடிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்களாம்.
« PREV
NEXT »

No comments