Latest News

July 23, 2013

இராணுவ நுட்பங்களை உகண்டாவுடன் பகிர இலங்கை இணக்கம்
by admin - 0

இலங்கை தனது இராணுவ நுட்பங்களை உகண்டாவுடன் பகிரவுள்ளது.அத்துடன், உகண்டா மக்கள் பாதுகாப்பு படைக்கு விசேட பயிற்சியையும் வழங்கவுள்ளது என ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
உகண்டா ஜனாதிபதி யொவரி முஸெவனி உகண்டாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
என்ரபே அரச மாளிகையில் நடந்த கூட்டத்தில் உகண்டாவுக்கான உயர்ஸ்தானிகர் வேலுப்பிள்ளை கணநாதனும் கலந்துக்கொண்டார்.
உகண்டா ஜனாதிபதியும் கோட்டாபய ராஜபக்ஷவும் இராணுவம் மற்றும் பாதுகாப்பு விடயங்களில் ஒத்துழைப்பு உட்பட இருபக்க உறவுகளையிட்டு உரையாடினர்.
இந்த சந்திப்பின் போது உகண்டா பாதுகாப்புக்கான ராஜாங்க அமைச்சர் ஜேஜே ஒடொங் மற்றும் லெப்டினன் ஜெனரல் சார்ள்ஸ் அன்ஜினா ஆகியோருடன் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி எயர் மார்ஷல் றொசான் குணதிலக்க மற்றும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர்.
« PREV
NEXT »

No comments