பொலிவியாவின் பொடொசி மாவட்டத்திலுள்ள கிராமத்தில் 35 வயதான பெண்ணொருவரை வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்த இளைஞனை உயிரிழந்த பெண்ணுடன் சேர்த்து உயிருடன் புதைத்து தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 35 வயதான லீண்ரா அரியன் ஜன்கோ என்ற பெண்ணை வல்லுறவுக்குட்படுத்தி கொன்றார் என இனங்காணப்பட்ட
17 வயதான சன்டோஸ் ராமோ என்ற
இளைஞனுக்கே மேற்படி தண்டனை கொல்குவாசகா எனுமிடத்திற்கு அருகிலுள்ள சிறிய கிராமத்திலேயே நிறைவேற்றப்பட்டுள்ளது. தண்டனை நிறைவேற்றப்படும் போது பொலிஸார் கிராமத்திற்குள் நுழையா வண்ணம்
தடுப்புக்களை ஏற்படுத்தியுள்ளனர் அக்கிராமத்து மக்கள்.
பின்னர் வல்லுறவுக்குட்படுத்திய
பெண்ணை அடக்கம் செய்வதற்காக தோண்டப்பட்ட குழியினுன் குற்றம் இழைத்ததாக நம்பப்பட்ட
இளைஞனை உயிருடன் வீசி மண்ணை போட்டு மூடி கொடூரமாக தண்டனை விதித்துள்ளனர். சுமார் 200 பேர் வரையில் வாழும் குறித்த கிராமத்தில் சட்டத்தை மீறி இவ்வாறு தண்டனைகள்
விதிக்கப்படுவது என்பது புதிதல்ல எனத் தெரிவிக்கப்படுகின்றது. சில நாட்களுக்கு முன்பும், காரை திருடியதற்காக 2 பேரை உயிருடன் அப்பிரதேசத்தில் கொழுத்தியதாக
தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அப்பிரதேசங்களில் குறித்த
சட்டங்களை நிலைநாட்டுவதென்பது பொலிவிய அரசுக்கு பெரும் சவாலாக உள்ளதாம். மேற்படி கிராமத்தில் அரிய வகை சில்வர் மற்றும் டின்(Sn) போன்றவை கிடைக்கும். இதனால் சுரங்கங்கத்
தொழிலே இங்குள்ளவர்களின் பிரதான தொழிலாக அமைந்துள்ளது. ஆனால் பாதுகாப்பற்ற சுரங்க
வேலைகளினால் வேலை செய்ய ஆரம்பித்து 12 வருடங்களில் அவர்கள் இறந்துவிடுவதாக கூறப்படுகின்றது. பொலிவிலுள்ள பொடொசி மாவட்டமே கடல் மட்டத்திலிருந்து அதிக உயரத்தில் (13,420 அடி)
இருக்கும் இடம் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment