Latest News

June 08, 2013

கடவுள் குளிக்கும் இடம் இதுதான்
by admin - 0

அவுஸ்திரேலியாவிலுள்ள ஏரியொன்றின் நீர் கடந்த 7,500 வருடங்களாக  காலநிலை மாற்றத்தாலோ வேறு தாக்கங்களாலோ மாற்
றமடையாத நிலையில் உள்ளதாக விஞ்ஞானிகள் ஆய்வுகளின் மூலம் அண் மையில் கண்டறிந்துள்ளனர். இந்த ஏரியிலுள்ள பளிங்கு போல் தெளிவாக உள்ளதுடன் மிகத் தூய்மையானதாகவும் உள்ளது. இந்த
ஏரியை கடவுளின் குளியல்தொட்டி என மேற்படி ஆய்வை மேற்
கொண்ட அடிலெய்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் வர்ணித்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகருக்கு 50 கிலோமீற்றர்
தொலைவில் இந்த ஏரி உள்ளது.இந்த ஏரியின் நீர் சுமார் 35 நாட்களுக்கு ஒரு தடவை அருகிலுள்ள பள்ளத்தாக்கிற்கு வடிந்து சென்று ஊற்
றுக்களால் மீண்டும் நிரப்பப்படுவதாகவும் இத்தகைய ஏரிகள் மிக அபூர்வமானவை எனவும் எனத் தெரிவிக்கப்படுகிறது. கோடை காலத்தில் நீல நிறமாக இந்த ஏரி காட்சியளிக்கிறது. மாரி காலத்தில் சாம்பல் நிறமாகத் தென்படுகிறது. இந்த ஏரியின் நீர் மிகத் தெளிவாக உள்ளதால் 10 மீற்றர் ஆழம்வரை தெளிவாக பார்க்கக்கூடியதாக
உள்ளது என கலாநிதி கமெரோன் பர் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments