
இறுதிக் கட்டப் போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு இலங்கை பொறுப்புக்கூற வேண்டும் என்ற நிலைப்பாட்டை அமெரிக்கா எடுப்பதற்குக் காரணமாக இருந்தவர்களுள் ஒருவரான மூத்த இராஜதந்திரி சமந்தா பவர் ஐ.நாவுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என வெள்ளி மாளிகை அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் மாளிகையின் தேசிய பாதுகாப்பு அதிகாரியாக உள்ள சமந்தா பவர், அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கையில் முக்கிய தீர்மானங்களை எடுத்து வருபவராக உள்ளார்.
இதேவேளை, ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதராக கட மையாற்றும் சூசன்ரைஸ், ஒபாமாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
ஐ.நாவுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள சமந்தா பவர் ஒரு முன்னாள் ஊடகவியலாளர். பெண்ணிய இனப்படுகொலைகளைத் தடுக்க அமெரிக்கா தவறியது எனக் குற்றஞ்சாட்டி இவரால் எழுதப்பட்ட நூலுக்கு சர்வதேச விருதும் கிடைத்துள்ளது.
ஐ.நாவுக்கான தூதுவராகச் சமந்தா பவர் நியமிக்கப்படவுள்ள நிலையில் சிரியா உள்ளிட்ட விவகாரங்களிலும் மனித உரிமை விவகாரங்களிலும் அமெரிக்காவின் நிலைப்பாடு இறுக்கமடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
No comments
Post a Comment