13ஆவது திருத்தச்சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு முன்னோடியாக மாகாணசபைகள் திருத்த உத்தேச (விசேட ஏற்பாடுகள்) சட்டவரைவு கொண்டு வரப்படுவதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்று அமைச்சரவைக் கூட்டத்தில் கடுமையாக எதிர்த்ததையடுத்து, அதனை அடுத்தவார அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராய்வதற்கு அரசு தீர்மானித்துள்ளது.
அமைச்சரவைக் கூட்டம் நேற்றுக்காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் 13ஆவது அரசமைப்புத் திருத்தம் மற்றும் அந்தத் திருத்தத்தில் மாற்றங்களைச் செய்யும் முன்னோடியாகக் கொண்டுவரப்படும் அவசர சட்டவரைவு என்பவற்றை ஆராயவிருந்த காரணத்தால் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.
13ஆவது அரசமைப்புத் திருத்தத்திலுள்ள இரண்டு விடயங்களை மாற்றுவது தொடர்பிலான உத்தேச சட்டவரைவை அமைச்சரவையில் சமர்ப்பித்த வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை வலுப்படுத்தும் வகையிலேயே மாகாணசபைகளின் அதிகாரங்களில் திருத்தங்கள் செய்யப்படுவதாகத் தெரிவித்து, அது தொடர்பில் நீண்ட விளக்கமொன்றையும் வழங்கியதாக அறியமுடிகின்றது.
இதனையடுத்து, மாகாணசபைகளின் அதிகாரங்களைக் குறைப்பதற்கு எடுக்கப்படும் அரசின் அவசர முயற்சிகளுக்கு அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, ரவூப் ஹக்கீம் ஆகியோர் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருக்கின்றனர்.
அதேசமயம், அமைச்சர்களான விமல் வீரவன்ஸ, சம்பிக்க ரணவக்க, கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோர் மாகாணசபைகளின் அதிகாரங்கள் குறைக்கப்படவேண்டுமென வாதிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், அவசர அவசரமாக அரசு இப்படியான திருத்தங்களைச் செய்வது மாகாணசபைகளைக் கலைத்துவிடுவதற்கு ஒப்பானதென இங்கு கண்டனம் தெரிவித்திருக்கும் அமைச்சர் ரவூப் ஹக்கீம், நாடாளுமன்றத்த தெரிவுக்குழு ஒன்றை அமைத்தாவது முதலில் ஆராய்ந்திருக்கவேண்டுமெனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
"அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தின் 153/ஜீ என்ற சரத்தை திருத்துவது என்பது மாகாணசபைகளை இல்லாமல் செய்வதற்கான முன்னோடியாகவே கருதவேண்டியிருக்கிறது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது பேராளர் மாநாட்டில் 13ஆவது திருத்தத்தின் எந்த அதிகாரங்களையும் குறைக்கும் விடயங்களுக்கு யாரும் ஆதரவை வழங்கமுடியாதெனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எனவே, எனது கட்சியுடன் நான் இதனைப் பேசவேண்டும். இதில் உடன்படுவதில் கொள்கை அடிப்படையிலும் எமக்குப் பிரச்சினை உள்ளது.
எனவே, இதன் அவதானிப்புகளைத் தெரிவிக்க கால அவகாசம் வேண்டும்'' என்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறியதையடுத்து, இதனை அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராய்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய கூட்டத்தின்போது நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், மாகாணசபைகளின் அதிகாரம் குறித்து அமைச்சர் ரவூப் ஹக்கீமும் சில நிமிடங்கள் வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட்டதாகவும் அறியமுடிந்தது.

No comments
Post a Comment