Latest News

June 11, 2013

கூட்டமைப்புக்கு இந்தியா அவசர அழைப்பு-அதிர்ச்சியில் இலங்கை அரசு
by admin - 0

13வது அரசியல் அமைப்புத் திருத்தம் ஊடாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள சில அதிகாரங்களை நீக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்திருப்பதன் மூலம் 1987 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இந்திய - இலங்கை உடன்படிக்கையில் ஒருதலைப்பட்ச மீறல் இடம்பெறுவதாக கூறி, அது குறித்து இந்திய பிரதமர், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆகியோருடன் கலந்துரையாட உடனடியாக இந்தியாவுக்கு வருமாறு, இந்திய அரசாங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த அழைப்புக்கு அமைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் அடுத்த சில தினங்களில் புதுடெல்லி புறப்பட்டுச் செல்ல உள்ளனர். கூட்டமைப்பினர் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, வெளிவிவகார அமைச்சர் சலமான் குர்ஷித், நிதியமைச்சர் பா. சிதம்பரம் ஆகியோரை சந்தித்தித்து, இலங்கை பிரச்சினனை தொடர்பாக தீர்மானகரமான பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக ராஜதந்திர தரப்புத் தகவல்கள் தெரிவித்தன.

இந்திய இலங்கை உடன்படிக்கையுடன் தொடர்புடைய அதிகாரங்களின் மாற்றங்களை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சி தொடர்பில் ராஜதந்திர மட்டத்தில் பேச்சுக்களை நடத்துவதற்காக இலங்கைக்கான விசேட பிரதிநிதி ஒருவரை நியமிப்பது குறித்து இந்திய கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் தெரிவித்தன
« PREV
NEXT »

No comments