Latest News

June 11, 2013

சிறிலங்காவைப் புறக்கணிப்போம் : ஒன்றுபட்ட முன்னெடுப்புக்கு லண்டனில் கருத்தமர்வு
by admin - 0

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் SAY NO TO SRI LANKA செயல்மையம் சிறீலங்காவைப் புறக்கணிப்பு தொடர்பிலான வேலைத்திட்டத்தை ஒன்றுபட்டு முன்னெடுப்பதற்கான கருத்தமர்வொன்றினை லண்டனில் ஏற்பாடு செய்துள்ளது. வர்த்தகம் பொருளாதாரம் அரசியல் விளையாட்டு என பல்வேறு தளங்களில் சிறிலாங்கா புறக்கணிப்பு தொடர்பிலான வழிப்பினையும் செயற்திட்டங்களையும் ஏற்படுத்தும் பொருட்டு தமிழர்கள் வாழும் புலம்பெயர் தேசங்கள் எங்கும் மையம் பணிகளை முன்னெடுக்கத் தொடங்கியுள்ளது. இதனொரு அங்கமாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை(14.06.2013) லண்டனில் அமைந்துள்ள Civic Centre, Station Road, Harrow, Middlesex, HA1 2DT.. எனும் இடத்தில் கருத்தரங்கொன்று இடம்பெறுகின்றது



மாலை 6:00 மணிமுதல் இரவு 9:00 மணிவரை நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் சிறீலங்காவைப் புறக்கணிக்கும் பலவகை வேலைத் திட்டங்களை ஏற்கனவே செய்துகொண்டிருக்கும் அமைப்புக்கள், மற்றும் இவ் வேலைத் திட்டத்தை செய்ய ஆர்வம் உள்ள ஏனைய அமைப்புக்கள் என்பவற்றை உள்வாங்கி நடைபெறவுள்ள இந்த முக்கிய கலந்துரைடாடலில் புத்திஜீவிகள் மற்றும் ஊடகவியலாளரையும் வந்து கலந்துகொண்டு ஆக்கபூர்வமான கருத்துக்களை பகிர்ந்து புதிய உத்வேகத்துடன் இவ் வேலைதிட்டத்தினை வெற்றிகரமாக முன்னெடுக்க உங்கள் அனைவரது ஒத்துழைப்பும் வேண்டி நிற்பதாக செயல்மையம் தெரிவித்துள்ளது. இக்கருத்தமர்வு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள ஊடகஅறிக்கையில் தமிழீழத் தாயக நிலப்பரப்புக்களில் சிங்களக் குடியேற்றங்களை நிறுவி துரித கதியில் சிங்கள மயமாக்கலை சிறீலங்கா பௌத்த பேரினவாத அரசு முன்னெடுத்துவரும் இவ்வேளையில் சிறீலங்காவை பொருளாதாரரீதியில் பின்தள்ளி பலமிழக்கச் செய்வதன் மூலமும் அவற்றை தடுத்துநிறுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை உலகப்பரப்பெங்கும் வாழும் தமிழ் அமைப்புக்கள் மட்டுமன்றி அனைத்து தமிழர்களும் ஆத்மரீதியாக இவ்வேலைத்திட்டத்தினை கூட்டாகவோ அன்றி தனித்தனியாகவோ முன்னெடுப்பதன் மூலம் குறுகிய காலத்துக்குள் சர்வதேச அரங்கில் சிறீலங்காவுக்கெதிரான பல மாற்றங்களை ஏற்படுத்தி அதன் விளைவாக சிறீலங்கா அரசிற்கு பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தமுடியும் எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டன் கருத்தமர்வு தொடர்பிலான மேலதிக விபரங்களை 07877204123 / 07869133073 / 07929349302 எனும் தொலைபேசியூடாக பெற்றுக் கொள்ள முடியும் எனத் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் SAY NO TO SRI LANKA செயல்மையம் சிறீலங்காவைப் புறக்கணிப்பு தொடர்பிலான குறும் பரப்புரை படங்களுக்கான போட்டியொன்றினை ஏலவே அறிவித்துள்ளமை இங்கு குறிப்பிடதக்கது
« PREV
NEXT »

No comments