Latest News

June 06, 2013

இந்தியா ஒதுங்கிக் கொள்ள வேண்டும்!-இலங்கை
by admin - 0

இலங்கை மற்றும் சீனா நாடுகளுக்கு இடையிலான
உறவு விவகாரத்தில் இந்தியா ஒதுங்கி நிற்க
வேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க
கோரிக்கை விடுத்துள்ளார். காஸ்மீர் விவகாரத்தில் இந்தியாவுடன்
இலங்கை எவ்வாறு தலையிடாமல்
இருக்கிறதோ, அதேபோன்று, சீனாவுடனான
எமது உறவுகள் விவகாரத்திலும்
இந்தியா தலையிடக் கூடாது. உண்மையில் சீனாவுடன் இந்தியா மிகப் பெரிய
வர்த்தகப் பங்காளியாக உள்ளது.
இரு நாடுகளும் தமக்கிடையான
பிரச்சினைகளை சுதந்திரமாக தீர்த்துக்
கொள்ள வேண்டும். ஏனைய நாடுகள் தமது பிரச்சினைகளைத்
தீர்த்துக் கொள்வதற்கான போர் வலயமாக
இலங்கையினைப் பயன்படுத்திக் கொள்ள
எம்மால் அனுமதிக்க முடியாது என அவர்
குறிப்பிட்டதுடன் 1962ம் ஆண்டு சீன -
இந்தியப் போரின் போது,இலங்கை, பர்மா, கானா, கம்போடியா, எகிப்து,
இந்தோனேசியா ஆகிய அணிசேரா நாடுகளின்
கூட்டத்தைக் கூட்டி, அப்போதைய பிரதமர்
சிறிமாவோ பண்டாரநாயக்க
இருநாடுகளுக்கும் இடையிலான
பிரச்சினையை தீர்த்து வைத்தார். அப்போது சிறிமாவோ பண்டாரநாயக்க
நடவடிக்கை எடுக்காமல் போயிருந்தால்
இந்தியாவின் ஒருபகுதி அப்போதே சீனாவின்
கட்டுப்பாட்டில் சென்றிருக்கும்.  உலகம் முழுவதிலும் உள்ள
அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின்
பொருளாதாரங்களில் சீனா முக்கியமான
பங்கை வகிக்கிறது. உலகின் 60 சதவீதமான முதலீட்டு நிதியும்,
மூலதன வளங்களும் சீனாவின் கட்டுப்பாட்டில்
உள்ளன. நாம் விரும்பினாலும்
சரி விரும்பாவிட்டாலும், அது தான் உண்மை. இது ஒன்றும் பாதுகாப்பு சார்ந்த
பிரச்சினையல்ல. இலங்கையின்
முன்னேற்றத்தைக்
குழப்புவதற்கு வடக்கு மக்களைப் பயன்படுத்த
இந்தியா முற்பட்டால், நாமும் அதற்கெதிராக
செயற்படுவோம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கை, சீன உறவுகள்
வலுப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது இந்தியாவுக்
கூறப்படுவது தொடர்பாக
கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக்
குறிப்பிட்டுள்ளார்
« PREV
NEXT »

No comments