Latest News

June 06, 2013

இந்த அரசாங்கத்தின் ஆட்சியில் 22 ஊடகவியலாளர்கள் படுகொலை
by admin - 0

இந்த அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதன் பின்னர் 22
ஊடகவியலாளர்கள்
கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய
தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்
கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். இந்தக் கொலைகளுடன் தொடர்புடைய
எவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. நாட்டில் சுதந்திரமான ஊடக
முறைமை காணப்பட வேண்டும்
என்பதே எமது விருப்பம். அரசியல் அழுத்தங்களுக்கு எதிராக
ஊடகவியலாளர்களினால் குரல் கொடுக்க
முடியாத நிலமை ஏற்பட்டுள்ளது. அரச ஊடகங்கள் பக்கச்சார்பான அடிப்படையில்
செயற்பட்டு வருகின்றன. வடக்கு தெற்கு என்ற பேதமின்றி ஊடகவியலாளர்கள்
ஒடுக்கப்படுகின்றனர் என அவர்
குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற விவாதங்களில் கலந்து கொண்ட
போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments