Latest News

June 05, 2013

வழமைக்கு மாறான 'நித்திய சுடர்' (அணையாத தீ) : நியூயோர்க் நீர்வீழச்சியில் அதிசயம்
by admin - 0

மனிதர்களின் ஆசையைப்
போலவே அறிவியல் உலகின் தேட
லுக்கும் ஓர் எல்லை இல்லை. ஆனால்
அதுவே அறிவியலின் எல்லை கடந்த
வெற்றிகளுக்கும் மேலும் கடக்கவி
ருக்கும் எல்லைகளுக்கும் காரணமாய் அமைந்துகொண்டிருக்கின்றது. அவ்வாறான ஒரு தேடலில் தெரியவந்த
உண்மை ஒன்று ஆராய்ச்சியாளர்
களை திணறச்செய்துள்
ளது என்றே சொல்ல வேண்டும். அதாவது "நித்திய சுடர்" என்பது இயற்கையாக அணையாமல் ஓரிடத்தில் தொடர்ச்சியாக எரிந்துகொண்டிருக்கும் நெருப்பே ஆகும். அது எவ்வாறு தொடர்ச்சியாக எரிந்து
கொண்டிருக்கின்றது என்றால், சூடான பாறைகளின் கீழிருந்து இயற்கையாக வெளியேறும் ஒரு வகை வாயு
வினால் என அறிவியல் விளக்கம் கூறுகிறது.
இவ்வாறான பாறைகள் உலகின் பல இடங்களிலும் ஆயிரக்கணக்கில் காணப்படுகின்றது. இது தொடர்பி
லெல்லாம் மறைவான சக்திகள் என்று மக்களை பீதிக்குள்ளாக்கும் புரியாப் புதிராகவோ வேறு வகையான தடு
மாற்றங்களோ ஆராய்ச்சியாளர்களிடம் இம்மியளவும் இல்லை. இதில் அறிவியலாளர்களுக்கு எந்த குழப்பமும்
இல்லை. சில உண்மைகள் கற்பனைகளைத் தாண்டி நிற்கும்.
அதுபோலவே இந்த நித்திய சுடர் என்ற அம்சமும். நெருப்பில்லாமல் புகையாது என்பார்கள். உண்மைதான் நித்திய சுடர் என்பதற்கு பின்னாலும் நெருப்பாய் சில காரணங்கள் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அவை அமானுஷ்ய சக்தி அல்ல என்பதை தெளிவாகக் கூறுகின்றனர்
விஞ்ஞானிகள். அமெரிக்காவின் நியூயோர்க்கிலுள்ள எழில் கொஞ்சும் செஸ்ட்நட் றிட்ஜ் பூங்காவிலுள்ள நீர்வீழ்ச்சியின்
அடியில் "நித்திய சுடர்" ஒன்று காணப்படுகின்றது. இது உலகிலுள்ள வசீகரமான நித்திய சுடர்களில்
ஒன்று. இந்த நித்திய சுடரும் வழமையானது போன்றே என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கொண்டிருந்த நிலையில் அண்
மையில் இதன் மீதான இந்தியானா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ள
உண்மை அறிவியலாளர்களின் அறிவை சோதிப்பதாக அமைந்துள்ளது. ஏனெனில் குறித்த நித்திய சுடர் வழ
மைக்கு மாறான முறையில் எரிந்து
கொண்டிருப்பதாக இந்தியானா பல்க
லைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டு
பிடித்துள்ளனர். அது எப்படி சாத்தி
யப்படுகின்றது என தற்போது அறிய முடியவில்லை எனவும் குறித்த
ஆராய்ச்சிகுழு தெரிவித்துள்ளது.
அதாவது,  ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் உருவானதாக நம்பப்
படும் இந்த நித்திய சுடரானது நீர்
வீழ்ச்சியின் அடிப்பகுதியில்
பாறைக்குள் இருக்கிறது. இதில்
எரிந்துகொண்டிருக்கும் நெருப்பா னது பழைமையானதும் மிக அதிக
வெப்பமான பாறையின் அடியிலி ருந்து எரிவை ஏற்படுத்தும் "சேல்" எனப்படும் ஒரு வகை கலவையிலிருந்து வெளியாகும் இயற்கை வாயுவின்
மூலம் எரிவதாக நம்பப்பட்டது. சேல் என்ற அமைப்பு களி போன்று அமைந்திருக்கும். இதில் சுண்ணாம்புக்கல் மற்றும் குவார்ட்ஸ் உள்ளிட்டமேலும் பல கனிமங்கள் படையாக இணைந்திருக்கும் இது ஒரு வகை இயற்கை வாயுவை வெளியிடவல்லது. அவ்வாயு எரிவதை ஊக்குவிக்கும் சக்தியாக இருக்கும். ஆனால்  இந்த நித்திய சுடர் சேல் மூலம் வாயுவைப் பெற்று எரியவில்லை என்பது தற்போது தெரியவந்துள்
ளது. இது குறித்து இந்தியானா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், நீர்வீழ்ச்சியிலுள்ள
பாறை தொடர்ச்சியாக எரிவதற்குரிய வெப்பத்தை வளங்குமளவிற்கு சக்தி படைத்திருப்பதற்கு சாத்திய
மில்லை. ஏனெனில் அப்பாறையின் வெப்ப
நிலை தேனீர் கோப்பை அள
விற்கே சூடாகவுள்ளது. மேலும்
அதிலுள்ள "சேல்" என்ற அமைப்பும்
முதலில் எதிர்பார்த்தது போன்று பழையனவாக இல்லை. எனவே இவ்விரண்டு காரணிகளாலிருந்தும் குறித்த நித்திய சுடர் எரியவில்லை என்பது தெளிவாகின்றது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே வேறு ஒரு எரி மூலத்தின் சக்தியினாலேயே எரிய வேண்டும் ஆனால் அது என்ன? அதனை குறித்த நீர்வீழ்ச்சியிலுள்ள பாறை எவ்வாறு உருவாக்குகின்றது என்
பது தொடர்பில் தற்போது ஆராய்ச் சியாளர்களால் கண்டுபிடிக்கமுடிய
வில்லை. இயற்கையுடன் சம்மந்தப்பட்ட சில விடயங்களுக்கு இயற்கையே தீர்வாக பல சமையங்களில் அமைந்துவிடும்.
அந்த வகையில் இந்த நித்திய சுடரும் அமைந்திருக்கக்கூடும். ஆனால் அது என்ன என்பது குறித்து அறிவியல் உலகம் அறிய முற்படுவது வழமையே. இதனால் ஆராய்ச்சியாளர்கள் இந்த அணையா நெருப்பின் மீதான
ஆராய்ச்சிகளையும் அணைப்பதாக இல்லை. சேல் போன்ற மேலும் பல மூலங்கள் காணப்பட வாய்ப்பிருக்கிறது. ஆகவே இவ்வகையான மூலங்களை நீரிலி
ருந்து அல்லது பாறைகளிலிருந்து வெளியேறும் குறித்தளவிலான வெப்பம் காபன் பிரிப்பு செய்வதனால்
அணையா நெருப்பு நியூயோர்க் நீர்வீழ்ச்சியில் உருவாகியிருக்கலாம். அல்லது அமெரிக்காவின்
கிழக்கு கடற்கரையின் பூமியின் கீழ்
மெதேன் வாயு உருவாகும்.
இதனை ஒத்த ஒரு வழியில் உரு
வாகும் வாயு மூலம் இங்குள்ள
அணையா சுடர் எரிந்துகொண்டி ருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதேவேளை பென்சில்வேனியாவின்
வடமேற்கு காட்டுப் பகுதியில் உள்ள
ஒரு குழியில் அணையாமல் நெருப்பு இருந்துகொண்டே இருக்
கிறது. இதற்கு காரணம் பழைமை
யான இயற்கை எரிபொருள் வாயு அங்கு கசிவதுதான் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அதாவது அங்க ஏற்பட்டுள்ள ஒழுக்கின் மூலம் எதேன் மற்றும் புரபேன் போன்ற வாயுக்கள் வெளியாகின்றது. அதுவே தொடர்ச்சியான எரிவுக்கு காரணமாகின்றது. இதேபோல ஒரு அடர்த்தியான வாயுக் கசிவு இங்கும் ஏற்பட்டிருக்கக்கூடும். அது என்ன
என்பதை அறியவே தற்போது ஆராய்ச்சியாளர்கள் முயற்சித்துக்கொண்டிருக்கின்றார்கள்.
விரைவில் அது என்னவென்பது தெரிய வரும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதனால் மர்மத்திற்கான விடை காண் பதற்காக ஆராய்ச்சியாளர்கள் தமது முயற் சிகளை ஆராய்ச்சிகளாய் தொடர்ச்சியாக எரிய விட்டுக்கொண்டிருக்கிறார்கள் கூடவே செஸ்ட்நட் றிட்ஜ் பூங்காவிலுள்ள நித்திய
சுடரும் மர்மாய் எரிந்துகொண்டே இருக்கிறது.
« PREV
NEXT »

No comments