Latest News

June 05, 2013

விமானத்திலிருந்து எழும் ஒலியினால் இறந்த கிளியொன்றுக்காக 2200 ஸ்ரேலிங் பவுண்கள் குண்டுகளால் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட எம் மக்களுக்கு????
by admin - 0

பிரித்தானிய விமானப்படை விமானங்கள் தாழ்வாக 
பறக்கும் போது விமானத்திலிருந்து எழும் ஒலியினால் இறந்த கிளியொன்றுக்காக  2200 ஸ்ரேலிங் பவுண்கள் (சுமார் 400,000 இலங்கை ரூபா)
நஷ்ட ஈடு வழங்கப்பட்டுள்ளது. அய்ர்ஷயர் நகரில் வளர்க்கப்பட்ட அரிய இனத்தைச் சேர்ந்த கிளியொன்று பிரித்தானிய
விமானப்படை விமானங்களின் சத்தத்தினால் இறந்துவிட்டதாகவும் அதற்காக தமக்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் எனவும் அதன் உரிமையாளர் கோரினார். அதையடுத்து அக்கிளியின் உரிமையாளருக்கு பிரித்தானிய
பாதுகாப்பு அமைச்சினால் 2200 ஸ்ரேலிங் பவுண் நஷ்ட ஈடு வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாழ்வாக பறக்கும் விமானப்படை விமானங்களின் ஒலியினால் ஏற்பட்ட சேதத்துக்காக நஷ்ட ஈடு வழங்கப்பட்ட ஒரேயொரு சந்தர்ப்பம் இதுவல்ல. பிரிட்டனின் பல பாகங்களிலும் 200இற்கும்  மேற்பட்ட சம்பவங்கள்
தொடர்பாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு 14 இலட்சம் ஸ்ரேலிங் பவுண்கள் நஷ்ட ஈடாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்  விமான குண்டுகளால் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட எம் மக்களுக்கு யார் நஷ்ட ஈடு கொடுப்பவார்கள் அவர்களின் கோரிக்கைகள் கூட கேட்கப்படுவதில்லை ஏன் தமிழர்கள் உயிர் என்ன கேவலமா உணருமா உலகமே எங்களையும் கவனியுங்கள் எங்களுக்கு நீதி தாருங்கள் காசு கேட்கவில்லை எங்களுக்கு நீதி தாருங்கள்

சரவணை மைந்தன் 

« PREV
NEXT »

No comments