Latest News

June 10, 2013

பிரகீத் எக்நெலிகொடவின் இருப்பிடம் பற்றிய தகவல்களை அரசாங்கம் வெளியிட வேண்டும்: மனித உரிமை கண்காணிப்பகம்
by admin - 0

லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொடவின் இருப்பிடம் பற்றிய தகவல்களை அரசாங்கம் வெளியிட வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோ அண்மையில், எக்நெலிகொடவை தாம் பிரான்ஸில் சந்தித்ததாக் குறிப்பிட்டிருந்தார்.

காணாமல் போன எக்நெலிகொட மற்றும் ஏனைய காணாமல் போனவர்கள் தொடர்பிலான பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. சட்டவிரோத மற்றும் பலவந்தமான கடத்தல்கள் காணாமல் போதல்கள் தொடர்பில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய வலய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

26 ஆண்டு கால யுத்தத்தின் போது 5671 பேர் பலவந்தமான முறையில் காணாமல் போயிருப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் புள்ளி விபரத் தகவல்கள் சுட்டிக்காட்டிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2008-2009ம் ஆண்டு காலப்பகுதியில் காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்கள் இதில் உள்ளடக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
« PREV
NEXT »

No comments