
அதிர்வு இணையம் பொலிசாரை தொடர்புகொண்டு கேட்டபோது, தலையில் ஏற்பட்ட காயத்தால் பிரசன்னா உயிரிழந்தார் என்று அவர்கள் தெரிவித்துள்ளார்கள். மற்றும் பிரசன்னா தனது வாகனத்தில் இருந்து விழுந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் அவர் அன்று சிகரெட் வாங்கச் சென்றதாக அவர் குடும்பத்தார் மேலும் தெரிவித்துள்ளார்கள். எனவே அவரிடம் இருந்து சிகரெட்டைப் பறிக்க யாராவது இவ்வாறு செய்தார்களா என்ற சந்தேகங்களும் தற்போது எழுந்துள்ளது. எனவே வட்பேட்டில் உள்ள கொஸ்கோவுக்கு, யாராவது தமிழர்கள் அன்று(26.05.2013) சென்றிருந்தால், மற்றும் குறிப்பிட்ட இன் நபரைப் பார்த்திருந்தால் பொலிசாரோடு உடனடியாகத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
டி.சி.ஐ கென்ட் எனப்படும் பொலிஸ் பிரிவினரே இந்த வழக்கை கையாள்கிறார்கள். தொடர்புகொள்ளப்படுபவர்களின் இரகசியங்கள் பாதுகாக்கப்படும் எனப் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்கள்.
contact DCI Kent on the incident room number 01707 355959 or alternatively Crimestoppers, the independent charity, in confidence on 0800 555 111.
athirvu.com
No comments
Post a Comment