கடந்த முறை நடைபெற்ற இது மாதிரி போராட்டங்களில் பல தமிழர்கள் கலந்துகொண்டு எதிர்ப்பினைத் தெரிவித்த பொழுது அங்கு வந்த சிறிலங்கா அணிக்கு ஆதரவானவர்கள் பயத்துடன் எதுவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் மைதானத்திற்கு சென்றனர் ஆனால் இம்முறை குறைந்த அளவு எண்ணிக்கை இளையோர்களே கலந்து கொண்டமையால் அங்கு வந்த சிறிலங்கா அணி ஆதரவாளர்கள் எதிர்ப்பும் போராட்டம் செய்த எம் இளையோர்களின் முகத்திற்கு முன்வந்து ராயபக்சாவை புகழ்ந்தும் வெருட்டியும் நாகரிகமற்ற சில செயல்களையும் செய்தனர் இதற்கு மேலாக சிறிலங்கா அணிஆதரவாளர்களுடன் வந்த சில தமிழர்கள் இன்னும் இதற்குமேல் கேவலமான சில நடவடிக்கையில் இறங்கியிருந்தனர் இவ்வளவு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் போராட்டத்தை இறுதிவரை நடாத்தி அங்குவந்தவர்களுக்கு துண்டுப்பிரசுர விநியோகமும் நடத்தப்பட்து.
எதிர் வரும் வியாழன் 13-06-13 லண்டனில் ஓவல் எனுமிடத்தில் காலை 11மணிக்கு சிறிலங்கா அணிக்கும் இங்கிலாந்திற்கும் இடையில் போட்டி நடைபெறஉள்ளது அந் நிகழ்வு தினத்திலும் போராட்டம் நடைபெறவுள்ளது.

No comments
Post a Comment