Latest News

June 01, 2013

இளங்குமரனுக்கெதிரான போராட்டத்தை வழி நடத்தியவர்கள் யார்? - வலை வீசுகிறது இராணுவப் புலனாய்வுத் துறை
by admin - 0

யாழ். பல்கலைக்கழக பொருளியற்றுறை விரிவுரையாளர் கலாநிதி இளங்குமரனுக்கெதிராக
மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக
மாணவர்களையும், அவர்களைத் தூண்டிவிட்டதாகக் கருதப்படும் ஒரு சில
விரிவுரையாளர்களையும் அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் இலங்கை இராணுவ
புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். அதன் எதிரொலியாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் செயலாளர் தர்ஷானந் பரமலிங்கத்தின் வீட்டின் மீது நேற்றிரவு கல்வீச்சு இடம்பெற்றிருக்கின்றது. யாழ்.பல்கலைக்கழக பொருளியற்றுறை விரிவுரையாளர் கலாநிதி இளங்குமரன், மாணவிகள் மீது பாலியல்
தொந்தரவுகளை நடத்தி வருகின்றமை குறித்து காலத்துக்குக் காலம் முறைப்பாடுகள் எழுந்த போதிலும்,
யாரும் அவருக்கெதிராக எந்தவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இளங்குமரனுக்கெதிராக 25 க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள்
அடங்கிய குற்றப்பத்திர மனு பல்கலைக்கழக நிர்வாகத்திடம் வழங்கப்பட்டிருந்தும், எதுவித நடவடிக்கைகளும்
எடுக்கப்படவில்லை. இந்நிலையில் மாணவர்கள் திரண்டு பொருளியற்றுறை விரிவுரையாளர் கலாநிதி இளங்குமரன் பரீட்சைப்
பணிகளில் ஈடுபடாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரி கடந்த வாரம்
ஆர்ப்பாட்டங்களை நடாத்தி, அவரது கொடும்பாவியையும் எரித்திருந்தனர். இந்நிலையில் இந்தப் போராட்டத்துக்கு காரணமானவர்கள் என்று இளங்குமரனால் காட்டிக் கொடுக்கப்பட்ட
ஒரு சில விரிவுரையாளர்கள், மாணவர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் இராணுவப் புலனாய்வுத்
துறையினர் ஈடுபட்டிருக்கின்றனர். குறிப்பாக இளங்குமரனின் காலத்தில் மாணவிகளாக இருந்து, தற்போது விரிவுரையாளர்களாக இருக்கும் பெண்
விரிவுரையாளர்களை அச்சுறுத்தும் நவடிக்கைகளும் இடம்பெற்றுள்ளன. விரிவுரையாளர்களிடமும், மாணவர்களிடமும் பல்கலைக்கழக வீதிகளில் வழிமறித்து குறித்த சில பெண்
விரிவுரையாளர்களின் பெயர் விபரங்கள், இருப்பிடங்கள் பற்றி விசாரிக்கும் படைப் புலனாய்வாளர்கள்,
ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படப் போகிறார்கள் என்றும் கூறியுள்ளனர். இதன் பின்ணணியிலேயே நேற்றிரவு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் செயலாளர் தர்ஷானந்
பரமலிங்கத்தின் வீட்டின் மீது நேற்றிரவு கல்வீச்சு இடம்பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகின்றது.
« PREV
NEXT »

No comments