மோசமான காலநிலை காரணமாக, கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்களில் குறைந்தபட்சம் 6 பேர்
உயிரிழந்துள்ளதுடன் 17 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றிரவு வீசிய கடும் காற்று மற்றும் மழை காரணமாக மேலும் 20 இற்கும் அதிகமான படகுகள்
விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அப்படகுகளிலிருந்தஇருந்த 20 மீனவர்கள்
காப்பாற்றப்பட்டுள்ளனர். காணாமல் போன மீனவர்களை தேடும் பணியில் இலங்கைக் கடற்படையின் 3 கப்பல்கள், அதிவேக 6 படகுகள்
மற்றும் விமானப்படையின் இரு பெல் 412 ஹெலிகொப்டர்கள் ஆகியனவும் ஈடுபடுத்தப்பட்டன. காற்றின் காரணமாக 20 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 396 வீடுகள் பகுதியளவில்
சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதே மன்னாரிலிருந்து கொழும்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரப் பகுதிகளில்
மணித்தியாலத்துக்கு சுமார் 60 முதல் 70 கிலோமீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால்
அப்பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
No comments
Post a Comment