Latest News

June 08, 2013

மயக்கமடைந்த இராவணன் ஏதேனும் ஓர் காலத்தில் மீள் எழுந்து, இலங்கையை மையமாகக் கொண்டு முழு உலகையும் ஆட்சி செய்வான்-அதிர்ச்சி தகவல்
by admin - 0

இலங்கையை மையமாகக் கொண்டு ராவணன் ஆட்சி செய்வான் என கொழும்பு ஊடகமொன்றில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கற்பனை கதையாகவும் உண்மை எனவும் விவாதிக்கப்பட்டு வரும் இராமாயணக் கதையில் மிகுந்த சிவ பக்தனாக சித்தரிக்கப்படும் இராவணன் பற்றிய விழிப்புணர்வு இலங்கையில் ஏற்படத் தொடங்கியுள்ளது.
சிவ பெருமானை நோக்கி கடுந் தவம் செய்து பல்வேறு வரங்களைப் பெற்றுக் கொண்ட இராவணன் பற்றி சிங்கள பௌத்த அமைப்புக்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இராவணன் மயக்க நிலையில் இருப்பதாகவும், அவனது இராஜ்ஜியம் புதையுண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையிலிருந்து மீட்கப்பட்ட மிகவும் பழமையானதும், முதலாவதுமான இராவணனின் சிலையொன்று பற்றிய தகவலை குறித்த கொழும்பு ஊடகம் வெளியிட்டுள்ளது.
பத்து தலைகளைக் கொண்ட இராவணின் மரத்திலான சிலையொன்று இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
இந்த சிலை சுமார் ஐநூறு ஆண்டுகள் பழமையானது.
மருத்துவ குணமிக்க விருட்சமாகக் கருதப்படும் வேப்பம் விருட்சத்தின் மரத்தினால் இந்த சிலை செதுக்கப்பட்டுள்ளது.
பத்து தலைகளினதும் முகங்களின் முக பாவங்கள் வித்தியாசமானதாகக் காணப்படும் வகையில் சில செதுக்கப்பட்டுள்ளது.
இருபது கரங்களிலும் ஆயுதங்கள் உள்ளிட்ட வௌ;வேறு பொருட்கள் ஏந்தப்பட்டுள்ளது.
வர்ணம் தீட்டப்பட்ட குறித்த சிலையின் சில பகுதிகளில் வர்ணம் வெளுத்து போயுள்ளதுடன் கைகளில் காணப்படும் ஆயுதங்கள் உடைந்துள்ளன.
இந்த சிலையை புனரமைக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இராவணனின் சிலையை பிரதிஷ்டை செய்யும் நோக்கில் இராவண தேவாலயமொன்றும் அமைக்கப்பட்டு வருகின்றது.
சீதையை புஷ்பக விமானத்தில் இலங்கைக்கு கடத்தி வந்த இராவணனுக்கு எதிராக ஸ்ரீராமன் போர் தொடுத்ததாகத் தெரிவி;க்கப்படுகிறது,
இந்தப் போரின் போது ஸ்ரீராமன் எய்த இராம பாணம் விசத்தைக் கொண்டது எனவும் இதனால் இராவணன் மயக்கமுற்றதாகவும் குறித்த கொழும்பு ஊடகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மயக்கமடைந்த இராவணனின் உடல் பூமியின் அடியில் புதைக்கப்பட்டது.
வரலாற்றின் அடிப்படையில் மயக்கமடைந்த இராவணன் ஏதேனும் ஓர் காலத்தில் மீள் எழுந்து, இலங்கையை மையமாகக் கொண்டு முழு உலகையும் ஆட்சி செய்வான் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த இராவண ராஜ்ஜியத்திற்கு முன்னைய காலமே தற்போது உருவாகியுள்து.
இராவணனின் இரத்த உறவினர் இலங்கையின் வனப்பகுதியில் தற்போதும் வாழ்ந்து வருவதாக குறித்த கொழும்பு ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, அண்மையில் சீதைக்கு பல மில்லியன் செலவில் கோயில் ஒன்றை அமைக்க இந்தியா முன்வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தக் கோயில் அமைப்பதற்கு முன்னதாக இராவணனுக்கு சிலை அமைக்க வேண்டுமென சிங்கள பௌத்த அமைப்பான ரவாண பலய அமைப்பு கோரியுள்ளது.
குறித்த சீதைக் கோயில் அமைக்கப்படவுள்ள பிரதேசமானது தற்போது ஓர் பௌத்த விஹாரையாக காணப்படுவதாக இலங்கையின் தமிழ் ஊடகமொன்றின் வாராந்த சஞ்சிகையில் சுட்டிக்காட்டியுள்ளது.
« PREV
NEXT »

No comments