Latest News

June 03, 2013

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் 45மாணவர்கள் இடைநிறுத்தம்
by admin - 0

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் 45 மாணவர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர். கடந்தவார இறுதியில்
இடம்பெற்ற ஆரப்பாட்டத்தையடுத்தே குறித்த மாணவர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர். சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் ஆரம்பித்திருந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்ற இடத்தின் மீது பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல் நடத்தியதையடுத்து மாணவர்கள்
பொலிஸார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனையடுத்து மாணவர்கள் சிலர் கைதுசெய்யப்பட்டதோடு பொலிஸாரும், சில மாணவர்களும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்றிரவு பல்கலைக்கழகத்தின் நிர்வாக குழுவினால் மேற்கொள்ளப்பட்ட
கலந்துரையாடலில் 45 மாணவர்களை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டது.
« PREV
NEXT »

No comments