Latest News

May 15, 2013

பேருந்துகள் ஞாயிறு நள்ளிரவுடன் வேலைநிறுத்தம்
by admin - 0

அகில இலங்கை தனியார் பஸ் கூட்டமைப்பு எதிர்வரும் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் வேலைநிறுத்த போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. எரிபொருள் விலைகேற்ப தனியார் பஸ் கட்டணங்களை அதிகரிப்பதற்கு போக்குவரத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இதனையடுத்தே வேலைநிறுத்த போராட்டத்தில் தாம் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த கூட்டமைப்பின் செயலாளர் அஞ்சன பிரியந்த தெரிவித்தார். இந்த வேலைநிறுத்த போராட்டத்துடன் தங்களுக்கு எவ்விதமான தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ள அகில
இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன பொரளை கெம்பல் மைதானத்தில்
எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறும் ஊர்வலத்தையடுத்தே பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் கலந்துரையாடுவோம் என்று அவர் கூறினார்.
« PREV
NEXT »

No comments