விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் கழித்த பின்னர் பூமிக்குத் திரும்பியிருக்கிறார். கனடாவைச் சேர்ந்த விண்வெளி வீரர், கமாண்டர் க்ரிஸ் ஹேட்பீல்ட் , அவர் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் செய்த விஞ்ஞான ஆராய்ச்சிகளைவிட , சமூக
ஊடகங்களைப் பயன்படுத்தியதற்காகத்தான் அதிகம் பிரபலமாயிருக்கிறார். விண்வெளி ஆராய்ச்சி நிலையம் உலகின்
பல்வேறு பகுதிகளின் மேல் பறந்தபோது, அவற்றைப் படமெடுத்து , தனது சமூக ஊடக தளத்தில் அவர் பிரசுரித்ததால், அவரது இந்த சமூக ஊடக தளத்தை சுமார் ஒன்பது லட்சம் பேர் பின்பற்றினர். பின்னர் பூமிக்கு இறங்குமுன், அவர், டேவிட் பௌயீ இயற்றிய " ஸ்பேஸ்
ஒட்டிட்டி" என்ற பிரபலமான பாடலை, புவியீர்ப்பு சக்தியற்ற நிலையில்,
கிடாரைப் பயன்படுத்திப் பாடிய காட்சியின் வீடியோ பதிவையும், தனது சமூக ஊடக தளத்தில் பிரசுரித்தார்.
No comments
Post a Comment