Latest News

May 14, 2013

மாறியது மகாசேன்.... வங்கப் புயலுக்கு ‘பிரபாகரன்‘ ?
by admin - 0


வங்கக் கடலில் உருவாகியுள்ள புயலுக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயரைச் சூட்டுமாறு சிங்கள பௌத்த தேசியவாத அமைப்பான ராவய பலய பரிந்துரை செய்துள்ளது.

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள புயலுக்கு சிறிலங்காவை ஆட்சிசெய்த மகாசேன மன்னனின் பெயர் சூட்டப்பட்டதற்கு ராவய பலய கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ராவண பலய அமைப்பின் செயலர் வண. இத்தேகண்டே சத்ததிஸ்ஸ தேரர், மகாசேன மன்னனின் பெயரை புயலுக்குச் சூட்டியது முட்டாள்தனமான முடிவு என்று தெரிவித்துள்ளார்.

மூன்று பத்தாண்டுகளாக விடுதலைப் புலிகளுக்குத் தலைமை தாங்கிய, பிரபாகரனின் பெயரை இந்தப் புயலுக்குச் சூட்டுவதற்கு ரவண பலய அமைப்பு எதிர்ப்புத் தெரிவிக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ராவண பலய உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் அழுத்தங்களை அடுத்து வங்கப் புயலுக்கு சூட்டிய மகாசேன் என்ற பெயரை சிறிலங்கா விலக்கிக் கொண்டுள்ளது.

எனினும் இந்தப் பெயர் விலக்கலுக்கான அதிகாரபூர்வ காரணத்தை வெளியிட சிறிலங்கா வளிமண்டலவியல் திணைக்களம் மறுத்து விட்டது.
« PREV
NEXT »

No comments