.jpg)
யாழ்.பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக அனைத்து பீட மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் நினைவேந்தல் நிகழ்வு காலை 11.30 மணி தொடக்கம் 12.30 மணிவரை இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழக வளாகத்திற்குள் அமைந்துள்ள சிவன் ஆலயத்தின் முன்பாக கையில் தீபங்கள் ஏந்தி உணர்வு பூர்வமாகவும் இடம்பெற்றதுடன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளும் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும் இந்த நிகழ்வில் பேராசிரியர்கள் முள்ளிவாய்க்கால் இன அழிப்பு தொடர்பில் நினைவுப் பேருரைகளையும் நிகழ்த்தினர். கடந்தாண்டு மாவீரர் தினத்தின் பின்னர் பல்கலைக்கழகம் புலனாய்வுப் பிரிவினரின் தீவிர கண்காணிப்பின் கீழ் இருக்கும் நிலையில் இன்றைய தினம் மிகவும் அமைதியாகவும், நம்பகமான மாணவர்களையும், பேராசிரியர்களையும் ஊடகவியலாளர்களையும் கொண்டு இந்த நினைவு நாள் நடைபெற்றுள்ளது.இதேவேளை பல்கலை வளாகத்தில் அமைந்துக்கள் ஆலயத்தின் உள்ளே இவ் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்ட போதிலும் அதற்கு நிர்வாகத்தினர் இதற்கு இடம் கொடுக்காத நிலையில் ஆலயத்திம் முன் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments
Post a Comment