மாத்தளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் விவசாய நடவடிக்கையின் போது பயன்படுத்தப்படும் கிருமிநாசினிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் காரணமாக அப்பகுதியில் வாழும் விலங்கினங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளனர். கடந்த வாரத்தில் மாத்திரம் குறித்த பகுதியில் 10 மந்திகள் மற்றும் மூன்று மான்கள் மரைகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விசாரணை நடாத்திய வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், விஷம் உடலுக்குள் சென்றதால் இந்த உயிரிழப்புக்கள் நேர்ந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
No comments
Post a Comment