
பிலியந்தலை - சித்தமுல்ல பகுதியில் வர்த்தகர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
நேற்று (16ம் திகதி) இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடத்தல் குறித்து வர்த்தகரின் மனைவி பிலியந்தலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளார்.
காரில் வந்த சிலர் குறித்த வர்த்தகரை கடத்திச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து பிலியந்தலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments
Post a Comment