


தாயொருவர் தனது மூன்று பெண் பிள்ளைகளுடன்
கிணற்றில் பாய்ந்ததில், மூன்று பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர். தாய் மட்டும் உயிர் தப்பியுள்ளார். உயிர் தப்பிய தாயிடம் பொலிசார்
விசாரணை செய்து வருகின்றனர். உயிரிழந்த மூத்த பிள்ளைக்கு 3 வயதாகிறது.
மற்றைய இரண்டு பிள்ளைகளும் ஒன்றரை வயதான இரட்டைக் குழந்தைகள் என்று பொலிசார் கூறுகின்றனர். கிளிநொச்சியில் இருந்து இடம்பெயர்ந்த இந்தத்
தாய் வவுனியா தாண்டிக்குளத்தில் கணவருடன் வசித்து வந்துள்ளார். கணவன் வேறொரு பெண்ணுடன்
தொடர்பு வைத்திருந்து குடும்பத்தைக் கவனிக்காமல்
விட்டதனால், குடும்பம் வறுமையில் வாடியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கணவனின் ஆதரவு இன்றி பிள்ளைகளையும் வளர்க்க முடியாமல்
இந்த இளம்பெண் மனமுடைந்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தப் பெண், தனது மூன்று பிள்ளைகளையும் கிணற்றில்
தள்ளிவிட்டு தானும் பாய்ந்து தற்கொலை செய்துகொள்ள முயன்றதாக
ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. உயிரிழந்த பிள்ளைகளின் சடலங்கள் மருத்துவ பரிசோதனைக்காக
வவுனியா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. வவுனியா பொலிசார் இந்தச் சம்பவம் தொடர்பில்
விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
No comments
Post a Comment