அசாத் சாலியை அரசாங்கம் விடுதலை செய்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில்விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று வரையில் பயங்கரவாதியாகக் கருதப்பட்ட அசாத் சாலி, மக்கள் அழுத்தம் காரணமாக இன்று விடுதலை செய்யப்பட்டார். அரசியல்வாதிகளை கட்டுப்படுத்த அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பயன்படுத்துகின்றது. எதிர்க்கட்சியின் அனைத்து தரப்பினரும்
ஒன்றிணைந்து செயற்பட்டால் இந்த
அடக்குமுறைகளுக்கு எதிராக குரல்
கொடுக்க முடியும் என ரணில் விக்ரமசிங்க
தெரிவித்துள்ளார். புலனாய்வுப் பிரிவினரால் விடுவிக்கப்பட்ட அசாத் சாலி தனியார் வைத்தியசாலையொன்றில்
சிகிச்சை பெற்று வருகின்றார். அசாத் சாலியை பார்வையிடச் சென்ற
போது அங்கு குழுமியிருந்த
ஊடகவியலாளர்களிடம் ரணில் விக்ரமசிங்க
இதனைத் தெரிவித்துள்ளார்
No comments
Post a Comment