Latest News

May 10, 2013

அசாத் சாலி விடுதலை செய்யப்பட்டார்!
by admin - 0

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ்
கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வு பிரிவினரால் தடுத்து
வைக்கப்பட்டுள்ள அசாத் சாலி சார்பில், சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அடிப்படை உரிமை மீறல் மனு ஆட்கொணர்வு மனு ஆகிய இரு மனுக்களை உயர்நீதிமன்றில் தாக்கல்
செய்திருந்தார். இவ் இரு மனுக்களும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையில், அடிப்படை உரிமை மீறல் மனுவுக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின்
சார்பில் ஒரு  கிழமை மேலதிகமாக அனுமதி கோரப்பட்டு எதிர்வரும் 28ம் திகதிக்கு இவ்வழக்கு விசாரணைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 7-2 பிரிவின்
கீழ் கைது செய்யப்பட்டு 72 மணித்தியாலங்கள்
தடுத்து வைக்க முடியும்.
அதனை நீடிப்பதானால் ஜனாதிபதியின்
உத்தரவுடன் 90 நாட்கள் தொடர்ச்சியாக தடுப்புக்காவலில் வைக்க முடியும். இவ்வாறாக மூன்று மாத காலம்
தடுத்து வைத்து விசாரணை செய்வது என அறிவித்திருந்த நிலையில், ஜனாதிபதி தடுப்புக்காவல் உத்தரவை மீளப் பெற்றதையடுத்து குற்றப்புலனாய்வு பிரிவினர் உயர் நீதிமன்றம் அடிப்படை உரிமை மீறல் மனுவுக்கு திகதி குறித்திருந்த நிலையில்,
இன்று அசாத் சாலி விடுதலை செய்யப்பட்டு நவலோக வைத்தியசாலையில்
சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்க மனுதாரர் சார்பில் சிரேஸ்ர சட்டத்தரணிகளான
சி.ஜே.வெலியமுன ,எம்.ஏ.சுமந்திரன்
ஆகியோர் சிரேஸ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசாவின் அனுசரணையுடன் நீதிமன்றத்தில் ஆஜராயினர். இவ் மனுத்தாக்கலை, கைதும் தடுத்து வைத்தலும் சட்டரீதியற்றது என்றதன் அடிப்படையில் சிரேஸ்ட
சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசாவினால் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அசாத் சாலி விடுதலையை உறுதிப்படுத்தினார் சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா.
« PREV
NEXT »

No comments