Latest News

May 06, 2013

ஷாருக்கானிடம் சத்யராஜின் வில்லத்தனம்!
by admin - 0

சத்யராஜ் தற்பொழுது ஷாருக்கான் படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் ஷாருக் கான், தீபிகா படுகோனே இணைந்து நடிக்கும் சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் சத்யராஜ் தீபிகாவின் தந்தையாக வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒருவன் மும்பையிலிருந்து ராமேஸ்வரம் வரை செல்வதற்குள் வழியில் ஏற்படும் நிகழ்ச்சிகளே சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தின் கதையாம். சிவாஜி, எந்திரன் திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஷங்கர் கூப்பிட்ட போது நடிக்க மறுத்த சத்யராஜ், விஜய்யுடன் நண்பன் திரைப்படத்திலும், ஷாருக்கானுடன் சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வில்லன் கதாபாத்திரத்தில் தனி இடம் பிடித்திருக்கும் சத்யராஜ், வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்து சமீபத்தில் பேசிய போது “ நீங்க ஹீரோயிஸம் காட்றதுக்கெல்லாம் நான் வில்லனா நடிக்க முடியாது. அமைதிப்படை அமாவாசையை விட ஒரு நல்ல வில்லன் கதாபாத்திரம் கொடுத்தால் நான் நடிக்கத் தயாராக இருக்கிறேன்” என்று கூறினார். இப்பொழுது சத்யராஜ் சென்னைக்கு கூட வரமுடியாத அளவிற்கு மும்பையில் சென்னை எக்ஸ்பிரஸ் படப்பிடிப்பில் நடித்துக்கொண்டிருக்கிறார். சத்யராஜ் போற்றிக்கொண்டாடும் அமைதிப்படை திரைப்படத்தின் தொடர்ச்சியான அமைதிப்படை இரண்டாம் பாகம் மே 10-ஆம் தேதி ரிலீஸாகவிருக்கும் நிலையில், படத்தின் புரமோஷனுக்கு கூட சத்யராஜ் சென்னை வருவாரா என்பது சந்தேகம்தானாம்.

« PREV
NEXT »

No comments