Latest News

May 06, 2013

அதிகாரங்களை பறித்த பின்னரே வடக்கு தேர்தல்; ஜனாதிபதி மஹிந்த இரகசியத் திட்டம்
by admin - 0

மாகாண சபைகளிடமிருந்து பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களைப் பறித்தெடுத்த பின்னரே வட மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி அரசு தீர்மானித்துள்ளது என்று நம்பகரமாக அறியவந்தது. இன்னும் மூன்று வாரங்களுக்குள் அரசமைப்பில் திருத்தம் கொண்டுவருவதற்கான திட்டம் முன்வைக் கப்படும் என்றும், அதன் பின்னரே வடக்குத் தேர்தலுக்கான கட்டளையை ஜனாதிபதி பிறப்பிப்பார் என்றும் தெரியவருகின்றது. அரசமைப்பில் 13 ஆம் சரத்தில் திருத்தங்களை செய்வதன் மூலம் காணி அதிகாரங்களை முழுமையாக மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும், பொலிஸ் அதிகாரங்களில் முக்கியமானவற்றை மத்திய அரசின் கீழ் கொண்டு வரவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான வரைவுத் திட்ட யோசனைகளைத் தயாரிக்கும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு பரிந்துரைக்காக சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பப்படும். அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்திலிருந்து பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை நீக்காது வடமாகாண சபைத் தேர்தலை அரசு நடத்தினால், அரசுக்கான ஆதரவு விலக்கப்படும் என அரசின் கடும்போக்குடைய பங்காளிக் கட்சிகளும், சிங்கள அமைப்புகளும் தொடர்ச்சியாக மிரட்டி வருகின்றன. அதேவேளை, ஆறு வருடங்களாகவுள்ள ஜனாதிபதியின் பதவிக்காலத்தை ஐந்து ஆண்டுகளுக்கு வரையறுக்கவும் மூன்று வருடங்களில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தவும் வழிவகுக்கும் வகையிலும் அரசமைப்பில் திருத்தம் கொண்டுவரப்படவுள் ளது. இவை அனைத்தும் அரசமைப்பின் 19ஆவது திருத்தமாகக் கொண்டு வரப்படவுள்ளன. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர, "பொலிஸ், காணி அதிகாரங்களைப் பறித்தெடுத்த பின்னரே, வடக்குத் தேர்தலுக்கான அறிவிப்பை ஜனாதிபதி விடுப்பார் என எமக்கு உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன. ஜனாதிபதியின் இந்த முடிவுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.'' என்றார்.

« PREV
NEXT »

No comments