Latest News

May 06, 2013

மலேசியாவில் மீண்டும் தேசிய முன்னணி ஆட்சி
by admin - 0

மிகவும் பரபரப்புக்கு இடையே நடைபெற்ற இந்தத்
தேர்தலில் மிகவும் குறுகிய பெரும்பான்மையுடன்
பிரதமர் நஜீப் ரசாக் தலைமியிலான தேசிய
முன்னணி வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைப்பதற்கு தேவையான 112
இடங்களை அக்கட்சி வென்றுள்ளதாக தேர்தல்
ஆணையம் அறிவித்துள்ளது. மலேசிய நேரம் நள்ளிரவு 2
மணி நிலவரப்படி ஆளும் கூட்டணி 119
இடங்களிலும் எதிர்தரப்பு 69 இடங்களிலும்
வென்றுள்ளன. கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆளும் தேசியக் கூட்டணி 140
இடங்களிலும், எதிர்தரப்பான மக்கள் கூட்டணி 82 இடங்களிலும்
வெற்றி பெற்றன. எனினும் இம்முறை ஆளும் கூட்டணி கடந்த தேர்தலை விட கணிசமான
அளவில் குறைந்த தொகுதிகளிலேயே வெற்றி பெற்றுள்ளன. மலேசியா சுதந்திரம்
அடைந்ததிலிருந்து ஆட்சியில் இருக்கும் தேசியக்
கூட்டணிக்கு மாறாக
இம்முறை அங்கு ஆட்சி மாற்றம் ஏற்படும்
என்று பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டதாக
செய்தியாளர்கள் கூறுகிறார்கள். இந்தத் தேர்தல் நியாயமான வகையில்
நடைபெறவில்லை என்றும் எதிர்கட்சிகளும்,
செயற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
தேர்தலில் போலி வாக்காளர் இருந்தனர் என்றும்
அடையாள மை அழிக்கக் கூடிய வகையில்
இருந்தது என்றும் எதிர்கட்சிகள் குறை கூறியுள்ளன. நடைபெற்று முடிந்த தேர்தலில் மலேசிய இந்திய காங்கிரஸின் தலைவர்
பழனிவேலு 80 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.
அதே கட்சியைச் சேர்ந்த பிரதமர் துறை அமைச்சர் தேவமணி 4776 வாக்குகள்
வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார். இந்தத் தேர்தலில் இந்திய வம்சாவளி மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக்
கூறும் ஹிண்ட்ராஃப் அமைப்பு, கடைசி நேரத்தில் ஆளும்
கூட்டணிக்கு தமது ஆதரவை தெரிவித்தது குறிப்பிடத்தகுந்தது.
« PREV
NEXT »

No comments