வட மாகாண சபை தேர்தல் நடாத்துவது குறித்து இதுவரை தனக்கு எவ்வித அறிவிப்பும் விடுக்கப்படவில்லை எனவும் தனது தேவைப்படி தேர்தல் நடாத்த முடியாது எனவும் தேர்தல்கள் ஆணையாளர்
நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். சட்டமன்றம், நிறைவேற்று அதிகாரம், அல்லது நீதிமன்ற பணிப்புக்கு அமைய மாத்திரதே தேர்தல் நடாத்த முடியும்
என அவர் தெரிவித்தார். அடுத்த மாதம் 1ம் திகதி வரும் வாக்காளர் தினத்தை முன்னிட்டு ராஜகிரிய தேர்தல்கள் செயலகத்தில் இன்று (14)
இடம்பெற்ற தெளிவுபடுத்தல் ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 2011 வாக்காளர் பட்டியல் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் 2012ம் ஆண்டு அவ்வாறு செய்யாவிடினும்
1919 என்ற அரச தகவல் அழைப்பு இலக்கத்திற்கு அழைத்து அது குறித்து தகவல் பெற முடியும் எனவும்
தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
No comments
Post a Comment