ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா பிரதேசத்தில் வௌ்ளத்தில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளனர். டிக்கோயா பிரதேசத்தில் பெய்த அதிக மழை காரணமாக வீடுகளுக்குள் வௌ்ளம் புகுந்துள்ளது. இந்நிலையில் வீடு ஒன்றில் இருந்த 7 வயதுச் சிறுமி ஒருவரும் 60 வயது முதியவர் ஒருவரும் வௌ்ள நீரில்
மூழ்கி உயிரிழந்துள்ளனர். இதே வீட்டில் இருந்த 42 வயதுடைய பெண் ஒருவர் வௌ்ள நீரில் அடித்துச்
செல்லப்பட்டு காணாமற்போயுள்ளார். இந்த அனர்த்தம் இன்று (13) மாலை இடம்பெற்றதுள்ளது. இதேவேளை லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டீ மலை கொளணியில் 7 வயதுடைய சிறுமி ஒருவர் மண்மேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளார். இன்று (13) மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் உயிரிழந்த இவரது சடலம் லிந்துலை வைத்தியசாலையில்
வைக்கப்பட்டுள்ளது. வீட்டிற்குள் புகுந்த வௌளத்தில் மூழ்கி உயிரிழந்த இருவரையும் மேலே உள்ள படத்தில் காணலாம்.
No comments
Post a Comment