Latest News

May 14, 2013

யாழில் மாசேனன் புயல்தாக்கத்தால் 200 ற்கு மேற்பட்ட வீடுகள் சேதம்!
by admin - 0

 யாழ்.மாவட்டத்தில் மாசேனன் புயல் தாக்கத்தின் காரணமாக மக்களுடைய இயல்பு வாழ்க்கை நேற்று முற்றாக
பாதிக்கப்பட்ட அதே வேளை, பல அசம்பாவிதங்களும் இடம்பெற்றுள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம்
அருமைநாயகம் தெரிவித்தார். இவ்வனர்த்தங்கள் காரணமாக 180 பேர்வரை இடம்பெயர்ந்துள்ளதுடன், 200 மேற்பட்ட வீடுகள்
சேதங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில். மாவட்டச் செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவ பிரிவால் நேற்று மாலை 4 மணிவரைக்கும் கணக்கொடுக்கப்பட்ட
புள்ளிவிபரங்களின் அடிப்படையிலேயே மேற்படி தகவல் தெரியவந்துள்து. நேற்று மாலை 4 மணியளவில் அனர்த்த முகாமைத்துவத்தினால் எடுத்த கணக்கெடுப்பின்படி மல்லாகம் மற்றும்
கொல்லங்கலட்டி பகுதியில் உள்ள முகாங்களில் வாழ்ந்த 42 குடும்பங்களைச் சேர்ந்த 180 பேர் இடம்பெயர்ந்த
அந்தந்தப் பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் தற்காலிகமாக தங்கியுள்ளனர். இவ்வாறு இடம்பெயர்ந்து தங்கியுள்ள மக்களுக்களுக்கு உடனடி தேவையான உணவுகள் மாவட்டச் செயலகத்தின்
ஊடாக அந்தந்த பிரதேச செயகங்கள் ஊடக வழங்கப்பட்டுள்ளது. மேலும் யாழ்.மாவட்ட செயலவகத்தின் தற்காலிக
இருப்பில் இருந்த தகரங்கள், தரப்பாள்கள் என்பனவும் வழங்கப்பட்டு வருகின்றது. மேலதிக உதவிகள் வழங்குவரற்கும்
ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. அதே போன்று மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள ஏராளமான வீடுகள் சேதத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
இவற்றில் பெரும்பாலக தீவுப்பகுதி, சங்கானை, தெல்லிப்பளைப் பகுதிகளிலேயே பெரும்பாலன பாதிப்புக்கள்
இடம்பெற்றுள்ளது. குறிப்பாக 8 வீடுகள் முற்றுமுழுதாக சேதங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. மேலும் 200
ற்கு மேற்பட்ட வீடுகள் பகுதியளவில் சேதங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. மேலும் தென்டைமானாறு பெரியமலை கடற்பாகம் எட்டாம் பகுதியில் நேற்று மீன்படிக்கச் சென்ற மீனவர்கள்
இருவரை மின்னல் தாக்கியுள்ளது. இவற்றில் சிவபாலன் என்பவர் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
அவருடன் தொழிலுக்குச் சென்ற தங்கவேலாயுதம் அருளாந்தம் (வயது 18) என்பவர் கடலில் தொலைந்துள்ளார்.
காணமல் போனவரை மீட்கும் பணிகளில் கடற்படையிரும் ஏனைய மீளவர்களும் ஈடுபட்டுள்ளனர். 
அதேபோன்று யாழில் நடைபெற்ற பல்வேறுபட்ட அனர்த்தம் காரணமாக 6 பேர் காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 4 பேர் யாழ்.போதனா வைத்திய சாலையிலும், 2 பேர் தெல்லிப்பளை ஆதர வைத்திய சாலையிலும்
சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் அனர்தங்கள் இடம்பெற்ற பகுதிகளை நான் நேரில் சென்று பார்வையிட்டுள்ளேன். அங்கிருந்த
மக்களின் குறைநிறைகளையும் கேட்டறிந்து அக்குறைபாடுகளுக்கு உரிய
உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments