Latest News

May 14, 2013

மடு திருத்தலத்திற்கான ரயில் சேவை இன்று முதல் ஆரம்பம்!
by admin - 0

மடு மாதா திருத்தலத்துக்கான
ரயில் சேவை இன்று செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.மதவாச்சியிலிருந்து மடு வரைக்குமான 43 கிலோமீற்றர் கொண்ட ரயில்பாதை 81.34 மில்லியன் டொலரில் புனர்நிர்மானம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் பாதையை மீள நிர்மாணிப்பதற்காக
இந்திய நிறுவனமொன்று நிதியை வழங்கியுள்ளது. மடுவிற்கான முதலாவது ரயில் அநுராதபுரத்திலிருந்து காலை 9.00 மணிக்குப் புறப்படவுள்ளது. இந்த முதலாவது ரயிலில் பொது மக்களுடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில்
ராஜபக்ஷ, போக்குவரத்து அமைச்சர் குமார
வெல்கம, பிரதியமைச்சர் றோஹன திசாநாயக்க ஆகியோரும் பயணிப்பர். அத்துடன் இலங்கைக்கான இந்திய
உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தாவும் இந்த ரயிலில் பயணிக்கவுள்ளனர்
என்று தெரிவிக்கப்படுகின்றது. மதவாச்சிக்கும் தலைமன்னாருக்கும்
இடையிலான 106 கிலோமீற்றர் கொண்ட ரயில் பாதை 230 மில்லியன் டொலர் செலவில் புனரமைப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டம் 2011 ஆம்
ஆண்டு ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது 
« PREV
NEXT »

No comments