Latest News

May 10, 2013

வகுப்பறைக்கு ஒருவர் எழுந்து நிற்போம். களமாடி வென்றெடுப்போம்.
by admin - 0

தொப்புள் கொடி ஈழ உறவுகள் ஒடுக்கப்பட்டும், சிதறியடிக்கப்பட்டும்,
இனப்படுகொலை செய்யப்பட்டும் துன்பப்பட்டுக்க ொண்டிருக்கும் இவ்வேளையில் தாய்த்தமிழகத்தி
லிருந்து மாணவர்களாகிய நாம் நம்
ஆதரவு குரலை உயர்தியிருக்கிறோம். தனி ஈழத்துக்கான பொது வாக்கெடுப்புக்க
ு தமிழர்களின் போராட்டங்கள்
ஒவ்வொரு நாட்டுக்கும் வேறுபடுகிறது.
முன்பு ஈழத்தில் ஆயுதப் போராட்டமாகவும்,
ஐரோப்பாவில் பேரணி, அரசியல் லாபியிங்
மூலமாகவும் நடக்கிறது. தமிழகத்தில், ஈழ
வரலாற்றை மக்களிடையே கொண்டுசேர்த்து அதன்
மூலமாக அரசியல் கட்சிகளுக்கு தமிழீழ
கொள்கையில் மாற்றம்
கொண்டுவருவதே சிறந்ததாக இருக்கும். சென்ற மாதம் வரை நம்முடன்
இனைந்து நின்று போராடிய இறுதியாண்டு மூத்த
மாணவர்கள் இறுதித்
தேர்வு முடித்துவிட்டு இந்நேரத்தில் முன்னாள்
மாணவர்களாக மாறிவிட்டனர். போராட்ட
நிலையோ அப்படியே உள்ளது. அடுத்தாண்டு நாமும் மாணவ பருவத்திலிருந்த
ு வெளியேறி இருப்போம். ஆனால் அதற்கு முன்
மாணவர்களுக்கான கட்டமைப்பை உருவாக்கிவிட்டு
சென்றால்தான் சில சுயநல கட்சிகளிடமிருந்தும்,
சில சுயநல இயக்கங்களிடமிருந்தும் மாணவ
போராட்டத்தை காத்துக்கொள்ள முடியும். வகுப்பறைக்கு ஒருவர் எழுந்து நிற்போம்,
இறுதி ஆண்டிலிருந்தும்
இறுதி ஆண்டுக்கு முந்தைய ஆண்டிலிருந்தும்
கல்லூரிக்கு இருவர் மாணவர்களின்
கருத்துக்களை சுமந்து வருவோம், மாவட்ட அளவில்
குழு அமைத்து மண்டலத்துக்கு ஒருவரை கொண்டு
மாணவர் குழுவை அமைப்போம். சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலும்,
நீலகிரி முதல் நாகை வரை உள்ள மாணவர்களின்
குரலை ஒன்றினைப்போம், "முடிவுகள் ஓரிடத்தில்
இருந்து கிளம்பாமல் கூட்டுத் தலைமையாக
இருக்கும் " தமிழகத்தில் உள்ள மாணவர்களாகிய நாம்
இணைந்து நின்று நம் கோரிக்கைகளை மக்களிடம்
கொண்டு சேர்ப்போம். அடுத்த ஐநா கூட்டத்தில்
நம் குரல் ஓங்கி ஒலிக்கச்செய்வோம். அடுத்த கல்வியாண்டு கல்லூரி திறந்தவுடன்
கட்டமைப்பை உறுதிப்படுத்துவோம்.
உலக வல்லரசுகள் இனைந்து நடத்திய தமிழின
படுகொலை தினமான மே 18ஆம் தேதி மாவட்ட
தலைநகரங்களில் பேரணியாக சென்று
ஈழத்தமிழரிடத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தக்கோரி ஐநா மன்றத்தை வலியுறுத்துவோம்
.
களமாடி வென்றெடுப்போம். தமிழீழ விடுதலைக்கான மாணவர்
கூட்டமைப்பு சார்பாக
பார்வை தாசன் - (லயோலா கல்லூரி-இறுதி ஆண்டு)
-
« PREV
NEXT »

No comments