Latest News

May 09, 2013

அன்புமணி ராமதாஸ் ஜாமீனில் விடுதலை: பாமகவினர் உற்சாக கொண்டாட்டம்
by admin - 0


பாமக இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் இன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மரக்காணம் கலவரம், வன்முறையை தூண்டும் பேச்சு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த ஆண்டு மாமல்லபுரத்தில் நடைபெற்ற சித்திரைப் பெருவிழாவில் வன்முறையைத் தூண்டும் விதமாக பேசியதற்காக தொடரப்பட்ட வழக்கில் பாமக இளைஞர் அணி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் கடந்த 3ம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சித்திரைப் பெருவிழாவில் வன்முறையைத் தூண்டும் விதமாக பேசியது, பிரம்மதேசம் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியது மற்றும் பொதுக் கூட்டத்தில் அவதூறாக போசியது தொடர்பாக அன்புமணி மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று மதியம் 3 மணிக்கு இந்த 3 வழக்குகளிலும் அன்புமணிக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இதையடுத்து அவர் புழல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவர் தி.நகர் காவல் நிலையத்தில் ஆஜராகி தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
« PREV
NEXT »

No comments