இலங்கை அரசின் பரப்புரையை பிரபல மனித உரிமைப் பேராசிரியர் பிரான்ஸிஸ் போய்ல் மறுத்துள்ளார். இலங்கையின் பரப்புரைக்கு ஏதுவாக
இங்கிலாந்து ஊடகங்கள் ராணி கொஞ்சம்
கொஞ்சமாகத் தன்
பொறுப்புக்களை இளவரசரிடம்
ஒப்படைத்து வருவதையும் இலங்கை சுட்டிக்
காட்டியுள்ளதை மறுத்த பேராசிரியர் போய்ல் (இல்லினாய்ஸ் பல்கலை சட்டக் கல்லூரியில்
கற்ப்பிப்பவர்) ஓர் அரசியல் சட்ட அரசின்
தலமையில் இருக்கும்
ராணி இனப்படுகொலையாளன் ராஜபக்சவுடன்
சேர்ந்து காட்சியளிக்க விரும்பவில்லை. அதுபோன்ற கெட்ட செயல்களை இளவரசர்
செய்யட்டும் என்று விட்டு விட்டார்
என்பதே உண்மைக் காரணம்
என்று உரைத்துள்ளார். ஏனென்றால் அரசியின் முடிவுக்கு காரணம்
இளவரசர் எந்த நாட்டின் தலமைப்
பொறுப்பிலும் இல்லை,
ஆகவே அவரை அனுப்புகிறார் என்று மேலும்
கூறியுள்ளார். ராணி ஒரு நாட்டின் தலைமைப் பொறுப்பில்
மட்டுமல்ல, பொதுநலவாய நாடுகள்
அனைத்துக்கும் தலைமைப் பொறுப்பில்
உள்ளார், இதுவே அவரது பயண
ரத்துக்கு முக்கிய காரணம். அதேவேளை கனடிய பிரதமர் ஸ்டீஃபன் ஹார்ப்பர்
பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்கப்
போவது கனடாவில் விமர்சனத்தையும்
வரவழைத்துள்ளது. பிரதமரின் புறக்கணிப்பு மட்டும் பெரிதாக
ஒன்றும் ஏற்படுத்தப் போவதில்லை.
புறக்கணித்தால்
கனடாவிலிருந்து அங்கு யாருமே போகக்
கூடாது. பிரதமர் மட்டும் போகாமல்
இருப்பது பொருளற்றது என்று அங்கு விமர்சன
எழுகின்றன. ஐ.நா. பொதுச் செயலாளர் அண்மையில்
வடகொரியாவில் நிகழ்த்தப் படும் மனித
உரிமை மீறல்களைப் பற்றி விசாரிக்க
அவுஸ்திரேலிய நீதிபதி ஒருவரை கடந்த
செவ்வாய்க்கிழமை நியமித்துள்ளதைக்
பேராசிரியர் போயல் குறிப்பிட்டு இதுபோல பான் கி மூன் இலங்கை விடயத்தில் ஏன் செய்ய
வில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
No comments
Post a Comment