
ஆர்யாவும், நயன்தாராவும் சின்னப்புள்ளத் தனமாக சண்டை போட்டுள்ளனர். ஆர்யாவுக்கும், நயன்தாராவுக்கும் திருமணம் என்று வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ராஜா ராணி படத்தின் டீசர் நேற்று வெளியானது. 45 விநாடிகள் ஓடும் டீசர் காதல் தோல்விக்கு பிறகும் வாழ்க்கை உண்டு. காதல் தோல்விக்கு பிறகும் காதல் உண்டு என்ற கருத்துடன் துவங்குகிறது. ஆர்யாவும், நயன்தாராவும் கண்ணாடி முன்நின்று தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ரெடியாகும்போதே இருவரும் கண்ணாடியைப் பார்த்துக் கொண்டே சின்னப் பிள்ளைகள் போன்று சண்டை போட்டுக் கொள்கின்றனர். டீசரைப் பார்க்கையில் படத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது என்று தெரிகிறது. மேலும் இந்த படத்திற்கு நல்லா செய்றாங்கய்யா விளம்பரம்.
No comments
Post a Comment