Latest News

May 12, 2013

முடியை குளிர்ச்சியாக வைக்கும் தயிர் ஹேர் மாஸ்க்
by admin - 0

அழகுப் பராமரிப்பில் தயிர் மிகவும் இன்றியமையாத ஒரு அழகுப் பொருள். அதிலும் முகப்பரு, பழுப்பு நிற சருமம் மற்றும் வறட்சியைப் போக்குவதற்கு சிறந்த பொருள். கோடையில் வெயில் அதிகம் என்பதால், முடி மிகவும் வெப்பமடைந்து உடைய ஆரம்பிப்பதோடு, உதிரவும் ஆரம்பிக்கும். ஆனால் தயிரை வைத்து முடியை குளிர்ச்சியுடன் வைக்கலாம். அதுமட்டுமின்றி தயிர் தலையில் இருக்கும் பொடுகை போக்கவும், முடிக்கு ஒரு சிறந்த கண்டிஷனராகவும் இருக்கும். இப்போது அந்த தயிரை வைத்து, எப்படியெல்லாம் முடிக்கு ஹேர் மாஸ்க் போடலாம் என்று பார்ப்போமா!!!

தயிர் மற்றும் எலுமிச்சை சாறு

தயிரை ஒரு பெரிய பௌலில் அடித்துக் கொண்டு, எலுமிச்சை சாறு சேர்த்து, முடிக்கு தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் பொடுகை போக்கும் ஷாம்பு போட்டு முடியை அலசினால், பொடுகுத் தொல்லை நீங்கி, முடி குளிர்ச்சியுடனும் இருக்கும்.




தயிர் மற்றும் வெங்காய சாறு
வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்துக் கொண்டு, அதில் தயிரை சேர்த்து, நன்கு கலந்து, ஸ்கால்ப்பில் தடவினால், ஸ்கால்ப்பில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி. பேன் தொல்லையிலிருந்தும் விடுதலை கிடைக்கும்.
தயிர் மற்றும் வெந்தயம் வெந்தயத்தை நீரில் ஊற வைத்து அரைத்து, அதனை தயிருடன் சேர்த்து கலந்து, முடி மற்றும் ஸ்கால்ப்பில் படும்படியாக தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, நீரில் அலசினால், உடல் வெப்பம் தணிவதோடு, முடியும் பொடுகின்றி, வலுவுடன் வளரும்.

தயிர் மற்றும் மருதாணி இலை

தயிர் ஒரு சிறந்த கண்டிஷனர். அத்தகைய தயிரில் மருதாணி இலையை ஊற வைத்து அரைத்து, தலையில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முடி மென்மையாகவும், பட்டுப் போன்றும் மின்னும். குறிப்பாக இந்த முறையில் நீண்ட நேரம் ஊற வைக்க வேண்டாம். ஏனெனில் இவை இரண்டுமே மிகுந்த குளிர்ச்சி தன்மை உடையவை. இதனால் சளி பிடித்துக் கொள்ளும். எனவே குறித்த கால அளவு மட்டும் ஊற வைத்து குளிக்கவும்.




« PREV
NEXT »

No comments