Latest News

May 19, 2013

வவுனியா விவசாயிகளின் வயல் நிலங்களை இராணுவம் சுவீகரிப்பு
by admin - 0

வவுனியா செட்டிகுளம் அருவித்தோட்டம் வயல்வெளிகளை இராணுவம்
உரிமை கோரியுள்மை விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயல் என செட்டிகுளம் கமநல கேந்திர
நிலையத்தின் தலைவர் முகமட் அப்துல் கரிம் கரீஸ் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், வவுனியாவில் செட்டிகுளம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அருவித்தோட்டம் என்ற கிராமத்தில் இப்
பிரதேச விவசாயிகளின் சுமார் 400 ஏக்கர் வயல் நிலங்கள் இராணுவத்தினரால் உரிமை கோரப்பட்டுள்ளது. இவ் வயல் பிரதேசம் செட்டிகுளத்தை சேர்ந்தவர்களின் பரம்பரைக் காணிகளாகும். இவ்வாறான காணிகளில் இராணுவத்தினர் ‘நோ என்றி’ எனவும் ‘இராணுவ காணி’ எனவும் எழுதி காட்சிப்படுத்தியுள்ளதுடன் இக்
காணிகளுக்கு உரிமை கோரியும் வருகின்றனர். எனினும் இக் காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்களை விவசாயிகள் வைத்துள்ளனர். இந் நிலையில் திடீரென எவ்வித முன் அறிவிப்பும் இன்றி இராணுவத்தினரால் இவ்வாறான
காணி சுவீகரிப்பு இடம்பெற்றுள்ளமை விவசாயிகளால் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது என தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments