Latest News

May 19, 2013

இலட்சியப் பாதை நோக்கிய எங்கள் பயணம் தொடரும்-மாவை சேனாதிராசா
by admin - 0


 முள்ளிவாய்க்கால் வரையான யுத்தகளத்தில் எங்கள் மக்கள்
எந்த இலட்சியத்துக்காகதங்களை உயிர்களைத் தியாகம்
செய்தார்களோ அந்த இலட்சியத்தை நோக்கிய பாதையில் எங்ககள்
பயணம் தொடரும். தமிழ் இனத்திற்காக உயிர்த் தியாகம்
செய்தவர்களின் நினைவிடங்களை,
துயிலுமில்லங்களை அழித்து மண்ணோடு மண் எங்கள் மனங்களில் வைத்து அவர்களைப் பூசிப்போம். இறந்தவர்களைக் கூட நினைவுகூரத்
தடைவிதிக்கும் நாகரீகமற்ற
அடக்குமுறை ஆட்சிக்குள் வாழ்ந்துகொண்டிருந்தாலும் அதற்கெல்லாம் நாம் அச்ச மாட்டோம் எனத் தெரிவித்தார்தமிழ்க் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா. முள்ளிவாய்க்கால் படுகொலை நான்காவது ஆண்டு நினைமும் அஞ்சலி நிகழ்வும் யாழ்.நகர் மார்ட்டின் வீதியில் உள்ள தமிழரசுக் கட்சியின் யாழ்.அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் கொல்லப்பட்டவர்களுக்கு தீபமேற்றி ஆஞ்சலி ச அவர் மேலும் கருத்து வெளியிடும் போது, போருக்கு முன்னரும் பின்னரும் இலட்சக்கணக்கானோர்
தமது உயிர்களை உயரிய நோக்கில் தியாகம் செய்துள்ளார்கள அவர்களுடைய தியாகத்தையும், அர்ப்பணிப்பையும்
நினைந்து போற்றுவது  நாகரீக சமூகத்தின் கடமை. அதையே 4வது வருடமாக செய்துகொண்டிருக்கிறோம். ஒழுக்கம் விழுப்பம் தரலாம் ஒழுக்கம் உயிரிலும் ஒம்பப்படும், ஒரு மனிதன் மனிதகுலத்தைச்
சேர்ந்தவன் நாகரீகமாக வாழவேண்டு;ம்.
எங்கு அடக்குமுறை ஒடுக்குமுறை இரக்கின்க எதிர்த்து நின்று போராடவேண்டும். ஒழுக்கத்தை கட்டிக்காப்பதற்காக உயிரையும் துச்சமாக மதிக்கவேண்டும். வரலாற்றில் மிகுந்த உயர்ந்த
நாகரீகத்தை கொண்ட சமூகம் நாங்கள்.
5ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்
சிந்துவெளிநாக ரீகத்தில்
மறைந்துபோனவர்களது உடல்களை தாழிகளில் வைத்துப் பாதுகாத்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளைக் கடந்தும் மரியாதை செய்த திராவிட பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள்
நாங்கள். எல்லாள மன்னனை தோற்கடித்த இடத்தில் எதிரியாக இருந்தாலும் அந்த மன்னனின் வீரத்தைப் போற்றி நினைவிடம் அமைத்தான் துட்டகைமுனு மன்னன். ஆனால் இன்று மண்ணின் விடுதலைக்காக
தம்மை அர்ப்பணித்தவர்களையும்
அப்பாவித்தனமாக கொல்லப்பட்டவர்களையும்
நினைவுகொள்ளமுடியாத அநாகரிக
ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. இறந்துபோனவர்கள் நினைவிடங்களும்
துயிலுமில்லங்களும் அழிக்கப்பட்டு அதன்மேல் இராணுவ முகாம் அமைக்கும்
அசிங்கத்தை இந்த மண்ணில் மட்டுமே காண முடியும். இந்த நாட்டில் ஜனநாயகம் இல்லை, கருத்து, எழுத்து சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளது இறந்தோரை நினைவு கூறி கண்ணீர் விடுவதற்கும் கூட இராணுவம் எமக்கு தடைவிதிக்கப்படுகின்றது. லட்சக்கணக்கான மக்களை போர் முனையில் போர் நெறிகளுக்கு மாறாக கொன்று குவித்தார்கள் என சர்வதேச மட்டத்தில் கூறப்பட்டு வருகின்றது. போரில்
வென்றுவிட்டோம், தோற்றுப்போன இனம்bஎன்ற சித்தாந்தத்தையும் ஏற்படுத்த முனைந்தார்கள். ஆனால் எங்கள் மக்கள் திடமான மக்கள். எங்களுடைய மண்ணின் விடுதலைக்காக, எதிர்காலத்தின் விடுதலைக்காக தம்மை அர்ப்பணித்தவர்களை நினைப்பார்,
மறக்கமாட்டார்கள். துயிலுமில்லங்களை அழித்து இராணுவ முகாம்களை அமைத்து வெற்றிச் சின்னங்களை அழித்தாலும் எங்கள் மனங்களிலிருந்து அவர்களை அகற்ற முடியாது. மே 18 ஒவ்வொரு ஆண்டும் தமிழன் வாழும் நாடெங்கும் அவர்களைப் போற்றி பூசித்துக்கொண்டே இருப்பார்கள். 2009ம் ஆண்டிற்கு முன்னர் இருந்தத்தை விட இராணுவமும், அதன் சக்திகயும், தமிழர் தமிழ் நிலம், அடையாளங்கள் அனைத்தையும் அழித்து இன அழிப்பை 3ஆண்டுகள்
செய்தது மட்டுமல்லாமல் தொடர்ந்தும் செய்ய நினைக்கின்றது. இதனை உலகத்தின் மனசாட்சிக்கு சொல்லியிருக்கின்றோம். அகிம்சை ரீதியில் ஜனநாயக ரீதியில் ஆக்கிரமிப்பிலிருந்து எங்கள் நிலங்களை மீட்போம். இதற்காக தொடர்ந்தும் போராடவேண்டும் என்ற உறுதியை இந்த நினைவு நாளில் நாங்கள் எடுத்துக் கொள்கின்றோம். 2009ம் அண்டின் பின்னர் எம்மை தோற்றுப்போன இனம் என்றார்கள். தோற்கடிக்க நினைத்தார்கள். ஆனால்
பேரழிவின் பின்னரும் வடகிழக்கில்
அரசாங்கத்தையும், அவரது ஆட்களையும் எங்கள் மக்கள் வாக்குகளால் தோற்கடித்தார்கள். சர்வதேச அரங்கிலும் இந்த அரசாங்கம் 3முறை தோற்கடிக்கப்பட்டுள்ளது நாங்கள் தோற்கடிக்கப்படவில்லை.
எங்களுக்கு உரித்தான சுயநிர்ணய
உரிமை அடிப்படையிலான உரிமையினை பெற நாங்கள் தொடர்ந்தும் போராட திடசங்கற்பம் கொண்டிருக்கின்றோம். இந்த சந்தர்ப்பதில் எது நடந்தாலும்
பரவாயில்லை என்று துணிந்து வவுனியாவிலும்,யாழ்பபாணத்திலும், பல இடங்களில் பல மாவட்டங்களில் எங்கள் மக்கள் இறந்துபோன எமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் தெற்ககில் ஒரு இனத்தை வீழ்த்தி தோற்கடித்து விட்டதாக கூறி இந்த
அரசு வெற்றிவிழா கொண்டாடுகிறது. நாங்கள் தோற்றுப்போன இனமல்ல.
முள்ளிவாய்கால் முடிவல்ல.
எமது விடுதலைக்காக போராட்டம்
தொடரும். அதற்காக
உயிர்களை கொடுத்தோரை தொடர்ந்து அவர்களின் இலட்சியப் பாதை நோக்கிய எங்கள் பயணம் தொடரும் என கூறியுள்ளார்.
« PREV
NEXT »

No comments