Latest News

May 19, 2013

2 ஆண்டுகள் கழித்து நாளை கேமரா முன் நிற்கும் வடிவேலு
by admin - 0


2 ஆண்டுகள் கழித்து வடிவேலு நாளை படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். கோலிவுட்டில் காமெடியில் கலக்கிக் கொண்டிருந்தவர் வடிவேலு. அவரும், விவேக்கும் காமெடியில் கொடி கட்டிப் பறந்தனர். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வந்தது. தேர்தலில் போட்டியிட்ட திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் குதித்தார் வடிவேலு. பிரச்சாரத்தில் வடிவேலு தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை காச்சு காச்சுன்னு காச்சி எடுத்தார். தேர்தல் முடிந்து திமுகவை வீட்டுக்கு அனுப்பிவிட்டு அதிமுக ஆட்சிக்கு வந்தது. மேலும் தேமுதிக எதிர்கட்சி ஆனது. அத்தோடு வடிவேலுவின் சினிமா வாழ்க்கைக்கு பிரச்சனையும் வந்தது. அவரை ஒப்பந்தம் செய்ய யாருமில்லாமல் போனது. பட வாய்ப்புகள் இல்லாமல் போயின.

« PREV
NEXT »

No comments