பிணக்குகளைத் தீர்த்துவைக்கும் நோக்கில் மன்னார் ஆயர் தலைமையில் இன்று நடைபெற்ற
கூட்டத்தின் முயற்சியும் தோல்வியில் முடிந்திருப்பதாகத் தெரியவருகின்றது. மன்னார் ஆயர் இராஜப்பு யோசப் ஆண்டகை தலைமையில் இன்று முற்பகல் மன்னாரில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் பெறுகின்ற ஐந்து கட்சிகளின் முக்கியஸ்தர்கள் அனைவரும் பங்குகொண்டிருந்தனர். குறித்த சந்திப்பின் போதும் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பினைப் பதிவு செய்வது தொடர்பில் தமிழரசுக்கட்சி எந்த
ஒரு இணக்கப்பாட்டிற்கும்
வரவில்லை என்று தெரியவந்திருக்கின்றது. இதனை அடுத்து இன்று பிற்பகல்
ரெலோ இயக்கத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனின்
அலுவலகத்தில் தமிழரசுக்கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளின் பிரமுகர்கள் சந்தித்துக்
கலந்துரையாடியிருக்கின்றனர். ஏற்கனவே நான்கு கட்சிகளும் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு அமைவாக கட்சியினைப் பதிவு செய்வதென தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.
இது தொடர்பிலான அடுத்த கட்ட
கலந்துரையாடல் நாளை மறுதினம் இடம்பெறும் என்றும் முடிவு செய்யப்பட்டிருப்பதாக மன்னார்
தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments
Post a Comment