Latest News

May 21, 2013

வரி செலுத்தா ஆப்பிள்(apple) நிறுவனம்
by admin - 0

உலகின் முன்னணி கணினி நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் தனது இலாபத்தை பல்வேறு சகோதர நிறுவனங்களுக்கும்
பகிர்ந்து கணக்கு காட்டிய விதத்தில் ஆயிரம் கோடி டாலர்கள் கணக்கில்
வரி செலுத்தாமல் தப்பித்துள்ளது என அமெரிக்க செனெட் ஆய்வறிக்கை ஒன்று கண்டறிந்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் விதிமீறல் எதிலும் ஈடுபட்டதாக இந்த ஆய்வறிக்கை குற்றம்சாட்டவில்லை என்றாலும், ஆப்பிள் நிறுவனத்தின் இந்த துணை நிறுவனங்கள் பல வரி செலுத்துவதற்காக எந்த
ஒரு நாட்டிலுமே பதியப்பட்டிருக்கவில்லை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அயர்லாந்தின் கோர்க் நகரில் பதியப்பட்டுள்ள இப்படியான
ஒரு துணை நிறுவனம், கடந்த ஐந்து ஆண்டுகளாக தொழில்நுறுவனங்களுக்கான வருமான வரி என்று கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு டாலர் கூட செலுத்தியிருக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியான டிம் குக், இது சம்பந்தமாக காங்கிரஸ் மன்றத்தில் தோன்றி வாக்குமூலம் அளிக்கவுள்ளார். நூறு கோடி டாலர்கள் பெறுமதி கொண்ட
துணை நிறுவனங்களை அமெரிக்காவுக்கு வெளியில் அமைத்துக்கொண்டும்,
வரி விவகாரங்களைப் பொறுத்தமட்டில் எந்த ஒரு நாட்டில் இருந்தும்
செயல்படவில்லை என்ற தோற்றத்தை உருவாக்கிக்கொண்டும்
வரி செலுத்தாமல் தப்புவதில் தன்னிகரற்ற கில்லாடியாக ஆப்பிள் விளங்குவதாக
இந்த ஆய்வறிக்கையை உருவாக்கிய செனெட் குழுவின் தலைவரான செனெட் உறுப்பினர் கால்ர் லெவின் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments