நெடுங்கேணியில் இடம்பெற்ற சிறுமி மீதான பாலியல் வல்லுறவு சம்பவத்தை கண்டித்தே அவர் இவர் தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
‘குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் மதிப்பளிக்கும் கலாசாரத்தை கொண்டவர்கள் நாம். இவ்வாறான நிலையில் நெடுங்கேணியில் சிறுமி மீது பாலியல் வல்லுறவு சம்பவம் நடந்தேறியுள்ளது.
எனினும் இது தொடர்பாக குற்றவாளி இன்னும் கைதுசெய்யப்படவில்லை. மலேசியா, சிங்கப்பூரில் இருந்தெல்லாம் குற்றவாளியை பிடித்துவரும் அரசுக்கு இச்சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளியை பிடிக்க முடியாதுள்ளது.
இவ்வாறான சம்பவங்கள் வடக்கு கிழக்கு பகுதிகளிலும் சிங்களவர்கள் வாழும் பகுதிகளிலும் அதிகமாக இடம்பெற்றுக்ககொண்டிருக்கின்றன.
எனவே இவ்வாறான சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள், பெண்கள் முன்வந்து செயற்படவேண்டும்.
மக்கள் இவ்வாறான சம்பவங்களை கண்டித்து வீதியில் இறங்கி கடுமையாக எதிர்க்காத வரை இச்சம்பவங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கும்’ என அவர் தெரிவித்தார்.
‘காவத்தையில் இருந்து சேனப்பிலவு வரை நடந்த சிறுமிகள் மீதான வல்லுறவு ‘
இதேவேளை, இச்சம்பம் தொடர்பாக கருத்து தெரிவித்த சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டாளர் என்.தேவகிருஸ்ணன்,
‘யுத்தத்திற்கு பின்னர் எமது மக்கள் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துவரும் நிலையில் குழந்தைகளை பாதுகாப்பது என்பது பெரும் பிரச்சனையாக உள்ளது’ என சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டாளர் என்.தேவகிருஸ்ணன் தெரிவித்தார்.
இன்று வீட்டில் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்றே குடும்பத்தை காக்க வேண்டிய நிலையிருக்கும்போது எமது குழந்தைகளுக்கு பின்னால் இருவரை பாதுகாப்புக்கு அனுப்பவேண்டியிருப்பது பாரதூரமான பிரச்சனையாகும்.
இதற்கு ஒரு தரப்பினரை மாத்திரம் குற்றம் சொல்லிக்கொண்டிருப்பதில் பயன் இல்லை. இதற்கு சரியான வேலைத்திட்டத்தினை அடையாளங்கண்டு எமது மக்களை பொருளாதார ரீதியாக வளர்த்தெடுப்பதற்கு எல்லோரும் சேர்ந்து பொது இணக்கப்பாட்டுடன் பணியாற்ற வேண்டும்.
அவ்வாறு நாம் செயற்படாவிட்டால் முள்ளிவாய்க்காலில் இறந்த அத்தனை மக்களுக்கும் துரோகம் செய்யவதாக இருக்கும்.
இன்று காட்டிக்கொடுப்பவர்களுக்கு மத்தியில் மக்கள் ஒன்றிணைந்து போராட்டங்கைள முன்னெடுத்துள்ளனர் என்பது வரவேற்க வேண்டிய விடயம்.
இதே நேரம் காவத்தையில் இருந்து சேனப்பிலவு வரை நடந்த சிறுமிகள் மீதான வல்லுறவு குற்றவாளிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
எனவே காவல்துறையினர் மனிதாபிமானத்துடன் மக்களின் சேவையாளன் என்ற வகையில் அதிகார வர்க்கத்தை விடுத்து தமது கடமையை ஏழை மக்களுக்காகவும் தொழிலாளர் வர்க்கத்திற்காகவும் சரியாக செய்ய வேண்டும்’ என்றார்.
No comments
Post a Comment