உலகின் மிக உயர்ந்த சிகரமான, எவெரெஸ்ட் மீது , 1953 மே 29ம் தேதி, சர் எட்மண்ட் ஹிலாரியும், ஷெர்பா டென்ஸிங் நோர்கேயும் முதலில் ஏறி சாதனை படைத்தனர்.மலையின் தெற்குப் புறமாக கடும் முயற்சிக்குப் பின் அவர்கள் உள்ளூர் நேரப்படி காலை 1130 மணிக்கு ஏறினர்.மலையில் பல்வேறு காட்சிகளையும், ஷெர்பா டென்ஸிங் , பிரிட்டன், நேபாளம், இந்தியா மற்றும் ஐ.நா மன்றக் கொடிகளை அசைப்பதையும், படமெடுத்தார் ஹிலாரி.அவர்களது மலையேறும் முயற்சி ஏப்ரல் 12ம்தேதி ஆரம்பமானது. சிகரத்தைத் தொட்ட நல்ல செய்தி ஜுன் 2ம் தேதி, அதாவது, பிரிட்டிஷ் அரசி இரண்டாம் எலிசபெத்தின் முடிசூட்டு நாளன்று, அறிவிக்கப்பட்டது.
No comments
Post a Comment