காயமடைந்தவர்கள் வவுனியா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என வவுனியா பொலிஸார் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
கெப்பிற்றிகொல்லாவ பகுதியில் கார் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் விபத்துக்குள்ளான நிலையில் நிறுத்தாமல் செல்வதை அவதானித்த பொலிஸார் 6 ஆவது மைல்கல்லில் உள்ள பொலிஸ் காவலரணுக்கு தகவலை வழங்கியிருந்தனர்.
எனினும் 6 ஆவது மைல்கல் பொலிஸார் காரை இடைமறித்தபோதும் அந்த கார் நிறுத்தாமல் சென்றமையினால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
காரினுள் இருந்த இருவர் காயமடைந்ததுடன் இருவர் தப்பியோடிய நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தினை உறுத்திப்படுத்திய வவுனியா மருத்துவமனை பொலிஸார், சம்பவத்தில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு மாற்றப்படவுள்ளதாகவும் தெரிவித்ததுடன் வவுனியா பொலிஸார் ஏனைய இருவரிடமும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.



No comments
Post a Comment