குறித்த பெண் பேரூந்தில் பயணிக்கும் பொழுது இரண்டு ஆசனங்களுக்கு கட்டணம் செலுத்தி பற்றுச்சீட்டை வாங்கியுள்ளார். ஒரு ஆசனத்தில் தான் அமர்ந்து கொண்டு மற்றைய ஆசனத்தில் தனது பொதிகளை வைத்துள்ளார். அப்பொழுது விடுமுறைக்கு ஊருக்குச் சென்று திரும்பிய சிவில் உடையணிந்த சில இராணுவத்தினர் மதுபோதையுடன் பேரூந்தில் ஏறிக்கொண்டனர்.
தாம் அந்த ஆசனத்தில் இருக்க போவதாக இராணுவத்தினர் குறித்த பெண்ணுடன் தகராறு செய்தனர். அந்தப் பெண் அவ்விடத்திறகு கட்டணம் செலுத்தியிருப்பதாகவும் இடத்தை வழங்க முடியாது என்றும் பேரூந்து நடத்துனர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அந்தப் பெண்ணை இராணுவத்தினர் விடாமல் சிங்களத்தில் கெட்ட வார்த்தைகளில் கடுமையாக திட்டியுள்ளனர்.
முகத்தை மூடியபடி அழுதுகொண்டிருந்த அந்தப் பெண் சிங்களத்தில் அப்படி பேச வேண்டாம் என்று சொல்லிய பொழுதும் இராணுவத்தினர் தமது நடவடிக்கையை நிறுத்தவில்லை. பேரூந்தில் பயணித்த மதகுரு ஒருவர் உட்பட பயணிகள் என்ன செய்வதென அறியாதிருந்தனர்.
No comments
Post a Comment