Latest News

April 03, 2013

தமிழன் என்று சொன்னது ஈழ தமிழனை மட்டும் அல்ல . ஒட்டு மொத்த உலக தமிழனையும்தான்
by admin - 0

ஈழத்திற்கு பொது வாக்கெடுப்பு என்ற
நிலையை உலகம் எடுக்கும் வரை , அதற்கான
அழுத்தங்களை திட்டமிட்டு போராடும் பணியை,
குணத்தை மானமுள்ள தமிழன் தன் வாழ்வில்
ஒரு பகுதியாக
ஏற்றுக்கொண்டதை உலகிற்கு உறுதியாக தெரிவித்து வருகிறது தமிழக மாணவர்களின் இன
மீட்சிக்கான போராட்டம் . அதை தொடர்ந்த உலகம்
முழுவதும் நடக்கும் எழுச்சி போராட்டங்கள் , ஈழ
நாட்டிற்கான முழு நம்பிக்கையை கொடுக்கிறது. தமிழனுக்கு என்று தனியே ஒரு நாடு இல்லை என்றால்
அவனது மொழியை , அவனது மிச்ச சொச்ச
கலாசாரத்தை அவனது பண்பாட்டை ,
அவனது அடையாளத்தை எக்காலத்திற்கும், பிற
அரசாங்க நடைமுறைகளை கொண்ட
அரசியளிர்க்குள் காக்க முடியாது. இங்கே தமிழன் என்று சொன்னது ஈழ
தமிழனை மட்டும் அல்ல . ஒட்டு மொத்த உலக
தமிழனையும்தான் ; உலகில்
அப்படி ஒரு தனி நாடு உருவாக வாய்ப்பு உள்ள இடம்
ஈழம் மட்டுமே . எனவே ஈழம் என்பது ஈழ தமிழனுக்கு மட்டும்
அன்று அது ஒட்டு மொத்த தமிழனுக்கும்
மொழி அடையாளமாக, கலாசார அடையாளமாக
இருக்கும் . தமிழரின் தனி நாடு, தமிழ் மொழியை காப்பாற்றும் ;
தமிழர்
கலாசாரத்தை வாழ்வு முறைகளை உயிர்பித்து எப்போதும்
நிற்கும். அதையே பிரதானமாக கொண்டு நிற்கும். தமிழ் இனம் , தமிழ் மொழி காக்க படவேண்டும்
என்றால் வாய்ப்பு உள்ள தமிழ் ஈழம்
நாடு தமிழருக்கு என்று நிச்சயம் வேண்டும். அதற்குண்டான பணிகளை நாம் நாளும் நம்
சிந்தனையில் திட்டமிடுவோம்

« PREV
NEXT »

No comments